வெளிவேசம்

நேற்று மாலை நடைபயணத்தில் இருந்த பொழுது ஒரு நபர் என்னை சந்தித்தார்,..

சார் எப்படியிருக்கீங்க ?

நல்லா இருக்கேன்..

நீங்க..

நல்லா இருக்கேன்,

பாத்து ரொம்ப நாளாச்சு,

ஆமாம் சார்

வீட்டுல எல்லாரும் சொகம்தானே ..

ஆமா எல்லாரும் சொகம்தான்.

ஊருக்கு போனிங்களா, இல்ல சார்

போகல..

சார் வாங்க எங்க வீடு பக்கம்தான் , ஒரு காபி சாப்புட்டுட்டு போவோம்..

இல்ல சார் , நேரமில்ல ..

உங்க போன் நம்பர் கொடுங்க..

098……….., சரி..

ஒரு மிஸ் கால் தர்றேன் , நீங்க என் நம்பர சேவ் பண்ணிக்கோங்க,

ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி – அவரது காலர் ட்யூன் ..

சரிங்க சார் வந்திருச்சு..

பாப்போம் ,

உரையாடலை முடித்துவிட்டு , நடந்து அறைக்கு வந்துவிட்டேன். குளிரை போக்கி கொள்ள நண்பர்கள் அனைவரும் ரூம் கீட்டரை சுற்றி அமர்ந்திருந்தனர். சாப்பிட்டு விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு , மொட்டை மாடிக்கு சென்றேன். அதை மொட்டை மாடி என சொல்ல முடியாவிட்டாலும், ஏறக்குறைய அதை போன்றதுதான், ஒரு ஆள் அமர்ந்து கொள்ளும் படியான அறை வெளியில் வெட்ட வெளி, வானத்தை அங்கிருந்து பார்த்து ரசிக்கலாம்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறியிருக்கும் நட்சத்திரங்களை பார்த்தேன். எதிரில் இருக்கும் மரம் குளிரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு , ஒடுங்கியிருப்பது போல் இருந்தது.

அழைபேசியை எடுத்து, வீட்டிற்கு பேசிவிட்டு , அமரும் பொழுதுதான், அந்த எண் என் மனதில் பெரிய வலியை உருவாக்கிக் கொண்டிருந்தது.

அது சாலையில் என்னோடு அறிமுகம் செய்து கொண்ட நபரின் எண்…

எவ்வளவு பேசினோம். நலம் விசாரித்தோம் ஆனால் ஒருவர் பெயரை ஒருவர் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த நபருக்கு என் பெயர் தெரிந்திருக்கலாம். எனக்கு அவரின் பெயர் ஏன் தெரியவில்லை,

அப்படி தெரியாமல் இருந்தாலும் , ஏன் கேட்டுக் கொள்ளவில்லை. ஏன் இந்த வெளிவேசம், தெரியவில்லை என அவரிடம் சொல்லிக் கொள்ள ஏன் மனம் வரவில்லை.

எந்த பெயர் சொல்லி அவரை அழைப்பேன்.

இரவு தூங்க நினைத்தாலும் தூக்கம் பிடிபடவில்லை., கண்கள் திறந்து பார்த்தேன் அறை முழுவதும் இருள் நிரம்பியிருந்தது , இருள் நிரம்பிய அறையில் மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன் நாளை கண்டிப்பாய் அவரிடம் பெயரைக் கேட்டுவிட வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தோடு.

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube