WATER- Deepa Mehta

சில காலங்களாகவே தண்ணீருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. சமீபத்தில் நான் நேசித்து வாசித்த  திரு. அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் நாவல். அடுத்து மனதை கண்ணீரில் மூழ்க செய்த SILENT WATER திரைப்படம்.  மத்திய  பிரதேசத்தில் உள்ள தண்ணீர் கஷ்டம். அடுத்து நான் பார்க்க வேண்டும் என நினைத்த என் நெடு நாளையக் கனவுத்  திரைப்படமான WATER திரைப்படம்.

பிலிப்ஸ்  DVD – யை  வாங்கும் போதே இந்த DVD –  யில் என் கனவுத் திரைப்படங்கள் அத்தனையையும் பார்த்து மகிழ வேண்டும் மேலும் மனித உணர்வுகளை மையப்படுத்தி நகரும் தரமான உலகத் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து, புரிதல்களை உணர வேண்டும் என்பதே.

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அங்காடித்தெரு, அதற்குப்பின் பார்த்த  WATER – திரைப்படம்.

காலை புலர்ந்து கொண்டு உள்ளது சூரியன், மெல்ல மெல்ல மேலெழுகிறான், ஒரு மாட்டு வண்டியில் உயிருக்கு போராடும் முதியவன் பயணம் செய்கிறான், அவன் அருகிலேயே சுய்யா (Chuyia)  என்ற சிறுமி கரும்பை தின்று கொண்டே பயணிக்கிறாள். பின்னணியில் மனதை மயக்கும் மெல்லிய இசை ஓடிக்கொண்டே உள்ளது.

அந்த சிறுமியின் அப்பா அவள் அருகில் வந்து சுய்யா (Chuyia) உனக்கு திருமணம் ஆனது ஞாபகம் உள்ளதா, இல்லை என்கிறாள் சுய்யா (Chuyia). பின் உன் கணவன் இறந்து விட்டான் நீ இப்போது ஒரு விதவை என்கிறார். சுய்யா (Chuyia) கேள்விகள் நிறைந்த பார்வைகளுடன் எத்தனை நாட்களுக்கு என்கிறாள்…  காட்சி கலைகிறது சுய்யா (Chuyia) வின் அழகிய கூந்தல்  கத்தரிக்கப்பட்டு, மொட்டை தலையுடன் விதவை கோலத்தில் காசியில் உள்ள விதவைகள் மடத்தில் சேர்க்கப்படுகிறாள்.

திரையில் 1938 என எண்கள் வருகிறது, சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் கதை விரிகிறது, அப்போது நிலவிய பெண்ணியக்  கொடுமைகளை காண்பிக்கிறார்  – தீபா மேத்தா.

பால்ய திருமணம், கணவன் இறந்தவுடன் அந்த பெண்ணின் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு விதவைகளுக்கே உள்ள தனி மடத்தில் விட்டு விடுவது, என சுதந்திரத்துக்கு முன்பு நிலவிய  சமூக கொடுமைகளை காட்சிகளாய் காண்பிக்கிறார் இயக்குனர், மேலும் மடத்தில் நிலவும் அதிகார மீறல்கள், பாலியல் கொடுமைகள் என முன்பு  நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே காண்பிக்கிறது,  தீபா மேத்தாவின் வாட்டர் திரைப்படம்.

படத்தில் சிறுமியாக வரும் சுய்யா (Chuyia) வாக நடித்த Sarala Kariyawasam,  அந்த  சிறுமி மனதில் வரைந்த சித்திரம் போல் நிலைத்துள்ளாள். கல்யாணி, சகுந்தலா தேவி, லட்டுக்கு ஆசைப்படும் அந்த முதியவள் என அனைவரும் மனித வாழ்வின் ஒளிவு மறைவற்ற பக்கங்களாக வாழ்ந்துள்ளனர்.

புண்ணியஸ்தளங்களில் ஒன்றான காசியை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர். கங்கா நதி, அதன் அருகிலேயே இருக்கும் கோவில்கள் அந்த நெருக்கடி நிறைந்த வீதிகள், என காசியையே கண் முன் வந்து  நிறுத்துகிறார்.

காந்திய சிந்தனையுள்ள நாராயண், ஆங்கிலேயர்களின் விஸ்கியையும், ஆங்கிலேயரின் கவிதையிலும் மூழ்கி கிடக்கும் ரவீந்திரா என இருவரும் விவாதித்துக்  கொள்ளும் காட்சிகள் மிகவும் பொருள் நிறைந்ததாக உள்ளது .

படத்தில் மிகவும் நெகிழ்வான காட்சியை இருப்பது,    சுய்யா (Chuyia) அந்த லட்டுக்கு ஆசைப்படும் முதியவளுக்கு, லட்டு வாங்கி வைத்து விட்டு, தூங்கும் அந்த முதியவளிடம் புவ்வா (பாட்டி ) லட்டு எனக்  கூறி விட்டு, தூரம் நின்று கிழவியை பார்த்துக் கொண்டு இருப்பதுதான், நிராசைகளுடன் வாழ்வை கழித்து  வந்த கிழவிக்கு லட்டு கிடைத்தவுடன் பழைய நினைவுகள் வந்து செல்கிறது. அந்த ஆனந்தத்திலேயே  சுய்யா (Chuyia) – வை கரிசனத்தோடு பார்க்கிறாள்.

இந்நிகழ்வு முதுமையில் தீராத  ஆசையுடன்  வாழ்ந்து புலம்பி தவிக்கும் மனிதர்களை நினைவுபடுத்துகிறது.  பால்ய பருவத்தில் எனது தாத்தா திருச்சிக்கு சென்று பார்க்கவில்லையே என புலம்பி தவிப்பார், இன்னொரு தாத்தா வடைக்கு மிகவும் ஆசைப்படுவார், அந்த நினைவுகள் எல்லாம் மீண்டு வந்து கண்களை குளமாகியது.

தன் ஆசைகள் நிறைவேறாமல் கல்யாணி கங்கையில்  மூழ்கி இறப்பதும், சிறுமி என்று கூட பாராமல் பாலியல் தொழிலுக்கு அவளை அனுப்புவதும் மனதை கனக்க செய்யும் காட்சிகள்.

சகுந்தலாதேவி கதாபாத்திரம் ஒரு மேம்பட்ட கதாப்பாத்திரமாக உள்ளது. சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பியதை அறிந்தவுடன், அந்த கதாபாத்திரம் உச்ச கட்ட கோபம் கொண்டு, கொடுமைக்கு ஆளான அந்த சிறுமியை ஏந்திக்கொண்டு காந்தியிடம்  ஒப்படைக்க ஜனத்திரள் மிகுந்த ரயில்வே நிலையத்தில் ஓடுவதும், இறுதியில் கல்கத்தாவிற்கு  திரும்பி செல்லும் நாராயண் குழந்தையை பெற்றுக் கொள்வதோடு படம் நிறைவடைகிறது.

WATER – நம் முன்னோர்கள் அடைந்த கொடுமைகளுக்கான ஒரு அடையாலச்  சுவடு. அவர்கள் சுமந்து திரிந்த வலியின்  எச்சம்.

இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும், கதாப்பாத்திரங்களாகவே  வாழ்ந்து நடித்த அனைத்து நடிகர்களுக்கும், திரைபடத்திற்கு உதவிய அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதை தவிர என்னால் என்ன செய்ய முடியும்.

Directed by Deepa Mehta
Produced by David Hamilton
Written by Deepa Mehta (writer)
Anurag Kashyap (Hindi translation of dialog)
Starring Seema Biswas
Lisa Ray
John Abraham
Sarala Kariyawasam
Manorama
Music by A. R. Rahman
Mychael Danna (background score)
Cinematography Giles Nuttgens
Editing by Colin Monie
Distributed by Fox Searchlight Pictures (U.S.)
Mongrel Media (Canada)
B.R. Films (India)
Release date(s) 8 September 2005 (Toronto)
See release dates section
Running time 114 minutes
Preceded by Fire (1996)
Earth (1998)


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube