உணர்தல் ..



அம்மா 
நேற்றைய உனக்கான
பொழுதுகளை – நீ
எனக்கானவையாய்
மாற்றினாய் ..

நானும்
உள்வாங்கி
உயிர்வளர்த்து
காற்றில் திரியும்
காகிதப் பூக்களைப் போல்
பறந்து திரிந்தேன்
பள்ளிகள் பின்
பதவிகளென..

எப்போதும் இருந்ததில்லை
உன் நினைவுகள்
என் நினைவுகளாய் ..

காலச்சக்கரத்தில் நானும்
காதல் காமமென
பயணித்து பின்
ஓய்ந்து உணர்கிறேன்
உனது வலிகளை
எனது வலிகளாய் ..


  (To Type in English, deselect the checkbox. Read more here)