வடக்கு வாசல் அலுவலகத்திற்கு செல்லும் வேளைகளில் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களை சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களையும், அவரின் இறுதிக்காரியத்தில் கலந்து கொண்டவன் என்ற முறையில் என் எண்ணங்களை இந்த பதிவில் பதிவு செய்துள்ளேன்.

மூத்த தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி –இயற்கை எய்தினார்…

17 பிப்ரவரி 12 அன்று வடக்கு வாசல் அலுவலகத்திற்கு சென்ற பொழுது, மறைந்த ஏ.ஆர். ராஜாமணி அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வந்திருந்தார். வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேஸ்வரன் அவர்கள், வடக்கு வாசல் அலுவலர்கள் அனைவரும் அடுத்த இதழுக்கான தயாரிப்பில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு அந்த வீட்டுக் காரர் மேல் ஒரு மரியாதை இருந்தது, ஏனெனில் ஏ.ஆர். ராஜாமணி அவர்கள் பதினெட்டு ஆண்டுகள் இவரது வீட்டிலேயே இருந்துள்ளார் மேலும் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களின் இறுதி தருணத்தில் அவரைக் காப்பாற்ற போராடியுள்ளார்.

அன்று, திரு. பென்னேஸ்வரன் அவர்கள் அலுவலக பணி நிமித்தமாக பிஸியாக இருந்தார். சில மணித்துளிகளுக்கு பின் வீட்டு ஓனர், இன்று ஏ.ஆர். ராஜாமணி அவர்களின் அறையை காலி செய்ய வேண்டும் என்றார்.

திரு. பென்னேஸ்வரன் அவர்கள், சந்திரமோகன், தேவராஜ் விட்டலன் (நான்), தங்கமணி நான்கு பேர்களும் அவரது அறைக்கு வீட்டுக்காரருடன் சென்றோம்.  வீட்டின் இரண்டாவது தளத்தில் அந்த அறையிருந்தது, மிக சிறிய அறை எப்படி அவர் இந்த அறையிலேயே இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தார் என ஆச்சரியப்பட்டேன்.

அறையில் மூட்டை மூட்டைகளாக கட்டி வைத்திருந்தார். அறையின் சுவர்களில் நாலாப் புறமும் இந்து தெய்வங்களின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தார். அவரை சில முறை பார்த்துள்ளேன் அப்போதெல்லாம் அவரது நெற்றியில் எப்போதும் திருநீறு இருந்து கொண்டே இருக்கும், அவர் தெய்வ பக்திமிக்கவறாக இருந்துள்ளார்.

அறையில் இருக்கும் மூட்டைகளை, நானும், தங்கமணியும் வெளியில் எடுத்தோம். பல மாதாந்திர இதழ்களும், எழுதாத டைரிகளும், சில புத்தகங்களும் இருந்தன. ஆனால் தேவையற்ற பல குப்பைகள்தான் அதிகம் இருந்தன. அந்த வாசனையே, ஒரு மாதிரியாக இருந்தது, திரு. பென்னேஸ்வரன் அவர்கள் அறையின் வெளியிலேயே இருந்துவிட்டார்.அவருக்கு இந்த வாசனை ஒவ்வாமல் இருந்தது, மேலும் அவர் அலுவலகப் பணிகள் அதிகம் இருப்பதால், வேகமாக பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்றார். 

நானும்,தங்கமணியும் நல்ல புத்தகங்கள் ஏதாவது இருந்தால் எடுத்து தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திற்கு கொடுக்கலாம் என தேடிக் கொண்டிருந்தோம். சில புத்தகங்கள் இருந்தன. அதிகம் மாதாந்திர இதழ்களும், டைரிகளும், குறிப்பாக எழுதாத டைரிகளே அதிகம் இருந்தன. சில அவர் எழுதிய டைரிகளை எடுத்து பேன்னேஸ்வரன் அவர்களிடம் கொடுத்தோம்.

வங்கி கணக்கு புஸ்த்தகம் கிடைத்தது அதை பேன்னேஸ்வரன் அவர்களிடம் காண்பித்தோம். அவர் அந்த புத்தகத்தை வீட்டிக்காரரிடம் கொடுத்து இந்த account – ல் யார் பெயரை Nominee – யாக கொடுத்துள்ளார் என விசாரிக்க சொன்னார். 

நானும், தங்கமணியும் அறையை காலிசெய்து கொண்டிருந்தோம், தேவையற்ற பொருள்களே அதிகம் இருந்தன. சில சில்லரை காசுகள் இருந்தன. அதை வீட்டு ஓனருக்கே கொடுக்கச் சொல்லிவிட்டார் பென்னேஸ்வரன் அவர்கள் ஏனெனில் வீட்டு ஓனர் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களின் கடைசி தறுணத்தில் அவரைக் காப்பாற்ற பணம் செலவு செய்துள்ளார்கள்.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே, நானும், பென்னேஸ்வரன் ஐயா அவர்களும், சந்திரமோகன் அவர்களும் இருந்தோம், பின் தங்கமணி அவர்களை அங்கிருந்து அறையை காலிசெய்ய உதவும்படி கூறிவிட்டு, வடக்கு வாசல் அலுவலகத்திற்கு வந்துவிட்டோம்.

மாலை சுமார் ஆறு மணியளவில் தங்கமணி அவர்கள் ஒரு பத்து புத்தகங்களை வடக்கு வாசல் அலுவலகத்துக்கு எடுத்து வந்தார், அவற்றை திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த வீட்டிலேயே வைத்துவிடுமாறும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வேண்டும் என்றால் எல்லா புத்தகங்களையும் எடுத்துச் செல்லலாம் என்றும் திரு.பென்னேஸ்வரன் தங்கமணியிடம் சொன்னார்.  அதில் ஏ.ஆர்.ராஜாமணி அவர்கள் எழுதிய சில டைரிகளும் இருந்தன. 

பழைய காகிதக் குப்பைக் கூளங்களையும் பயனில்லாத மாத இதழ்களையும் வீட்டுக்காரரே பழைய பேப்பர்களை எடுக்கும் ஆளை அழைத்து விலைக்குப் போட்டு பணம் எடுத்துக் கொண்டதாக தங்கமணி  கூறினார்.  ராஜாமணி அவர்களின் மருத்துவ செலவுக்கு அந்த வீட்டு ஓனர் செலவு செய்திருப்பதால் அந்தப் பணத்தை அவர் எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்றார் திரு.பென்னேஸ்வரன்.  டைரிகளிலும் எதுவும் விசேஷமாக இல்லை.  அகில இந்திய வானொலி சென்ற தகவல்களும் டெல்லி வந்த எழுத்தாளர்கள் வருகை பற்றி மட்டுமே சிறு சிறு குறிப்பாக எழுதியிருக்கிறார் திரு.ராஜாமணி அவர்கள்.

நம்மிடையே, எழுத்தை நம்பியே வாழ்ந்த மனிதனின் எஞ்சிய நினைவாய் அவரது டைரிகளும் , சில புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube