இன்று (13 பிப்ரவரி 2012) அதிகாலை எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி அவர்கள் மரணமடைந்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அன்னாரின் உயிர்  பிரிந்தது.

வடக்கு வாசல் அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். ஆனால் காலை எட்டுமணிக்கு எனக்கு வந்த தொலைபேசி என் திட்டத்தை மாற்றியமைத்தது.

திரு. செந்தில் அவர்கள் செய்த தொலைபேசியது, “சார், ராஜாமணி சார் இறந்துட்டார், R.B. Seth Jessa Ram Hospital, க்கு வரமுடியுமா என்றார்.

மனம் நிறைய வலி நிரம்பிவிட்டது, எத்தனையோ நாட்கள் அவரை பார்த்துள்ளேன். வடக்கு வாசல் அலுவலகத்திற்கு அவர் வரும் பொழுதெல்லாம் கலைகட்டும், மேஜையில் இருக்கும் புத்தகத்தை எடுத்து வாசித்துவிட்டு, தன் விமர்சனத்தை பாரபட்சம் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருப்பார்.

அவரிடம் அதிகம் பேசி, பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவர் வடக்கு வாசல் அழுவலகத்திற்கு வரும் பொழுது பல முறை அவரை சந்தித்துள்ளேன். சில முறை அவரோடு பேசியும் உள்ளேன்.

முதிய வயதிலும் அவரது, வைராக்கியமான செயல்பாடுகள் எனக்கு ஆச்சர்யத்தை, உண்டாக்கியது.

தனது 15, 16 வயதிலேயே டெல்லி வந்து, டெல்லி வாசியாகியுள்ளார். டெல்லியை பற்றிய பல விசயங்களை அறிந்த மனிதர். வடக்கு வாசல் ஜனவரி மாத இதழில்  டெல்லி நினைவுப் பாதையில் ஒரு பயணம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.  அந்த கட்டுரையை வாசித்த பொழுது, காலத்தின் பின்னே பயணம் செய்து அன்றைய டெல்லியை பற்றி அறிந்து கொள்ளமுடிந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்சங்க நிகழ்ச்சியொன்றில் அவரது நகைச்சுவை கலந்த, ஆளுமைமிக்க பேச்சை நானே பதிவு செய்துள்ளேன். கேட்க இங்கே அழுத்தவும்.

பல ஆண்டுகளாக எந்த ஒரு உறவுகளின் துணையுமின்றி தனியாக எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த உத்தமர்.

அவரது முதிய வயதில், நான் அறிந்த வரையில் அவரை பேணிக்காத்தவர், வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேஸ்வரன் அவர்கள். அவருக்கு பல முறை பொருளுதவி செய்தும், வடக்கு வாசல் பத்திரிக்கையிலும், இணையத்திலும் எழுதி உதவி செய்த உத்தமர்.  ஓரு வேண்டுகோள்

R.B. Seth Jessa Ram Hospitalக்கு நான் சென்றிருந்த பொழுது அங்கே மிகச்சிலரே மனிதர்களே இருந்தனர். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச்சிலரே கலந்து கொண்டதாக புத்தகத்தில் வாசித்துள்ளேன். அதே நிலை, இன்றைக்கு நிலைத்திருப்பது வேதனைக்குறிய விசயமாக இருக்கிறது.

ஏ.ஆர்.ராஜாமணி அவர்களை வீட்டு உரிமையாளர் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு சேர்த்துள்ளார். பணத்தை அவரே கட்டி, தனித்திருந்த எழுத்தாளரை காப்பாற்ற போராடியுள்ளார். தில்லியை சேர்ந்த பெரிய மனிதர் ஒருவரை தேடி சென்று அந்த அயல் மொழிக்கார மனிதாபமிக்க மனிதர், நம் மொழிக்கார பெரியமனிதரின் கதவை தட்டிய பொழுது, உதவி எதுவும் செய்யாமல். வடக்கு வாசல் புத்தகத்தை கொடுத்து இதுல இருக்குற நம்பருக்கு போன் பண்ணுங்க என கூறியுள்ளார்.

எவ்வளவு கேவலமான செயல், பகைவனையும் நேசியென.. நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன…

மாற்றான் தோட்டத்தில் பூக்கும் பூவிலும் நல்ல மணமிருக்கும் – என அரசியல் உத்தமர்கள் கூறியுள்ள தமிழ் மொழியில் சக மனிதனை, அதுவும் இறந்துவிட்டான் என கூறிய பின்னும் வெறுப்பை உமிழ்வது, மனிதாபிமானம் உள்ள எவராலும் ஜீரணிக்க முடியாத செயல்.

One Response so far.

  1. Kannan says:

    வருத்தமான தகவல்…. எழுத்தாளர்களுக்கு உள்ள சாபகேடு.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube