முகவரி

சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வேளையில் இரயில் நிலையத்தில்தான் அவர்களை சந்தித்தேன், எனது பெட்டியில் ஏறிய பின் ஜன்னல் கம்பிகளினூடே இரயில் நிலைய நடைபாதையை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பரபரப்புடன் என்னை “ நீங்கள் மதுரை வரை செல்கிறீர்களா என கேட்டார். நான் ஆமாம் என்றேன். பக்கத்து பெட்டியில் என் மனைவியும், எனது தாயும் உள்ளார்கள் அவர்கள் இப்பொழுதுதான் முதல் முறையாக இவ்வளவு தூரம் செல்கிறார்கள் , எனது மகன் மதுரையில் இருக்கும் பள்ளியொன்றில் டீச்சராக பணிபுரிகிறான் , இரயில் நிலையத்திற்கு வந்துவிடுவான். நீங்கள் இவர்களை  பத்திரமாக மதுரையில் இறக்கிவிடவும் என கேட்டுக் கொண்டார். பின் இரயில் நகரும் பொழுது பரபரப்புடன் இருந்தனர். நான் அவர்களிடம் சென்று நானும் மதுரைதான் செல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன். சிறிது அமைதி அடைந்தனர். புதிய இடத்திற்கு செல்லும் போது நம்மை அறியாமலேயே பரபரப்பு தொற்றிக் கொள்வது சகஜமானதுதான் என்றாலும், சிலர் மிகவும் பதட்டமடைந்து விடுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் மொழி அறியாமை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு மொழியை அறிந்து கொள்வது என்பது மிக மிக மேன்மையான விசயம். நாம் ஏன் அவ்வாறு முயற்ச்சிப்பதே இல்லை. நமது மொழி அறியாமைக்கு மிக முக்கியமான காரணம் என நான் எண்ணுவது அரசியலையே. கடந்த அரை நூற்றாண்டுகளாகவே அரசியல் என்ற பெரிய பூதம் எப்படி நமது மொழியை காத்துக் கொள்கிறேன் என்ற போர்வையில் மக்களின் மனதில் அறியாமையை விதைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இருந்தும் நாம் அதற்கான மாற்று வழியை யோசிப்பதில்லை.

நாம்தான் கற்றுக் கொள்ளாமல் வாழ்ந்துவிட்டோம் என்றாலும், நம் சந்ததிக்காவது அந்த மொழி சிக்கலில் இருந்து விடுபட வைப்போம் என்ற முயற்சியை எத்தனை பேர் மேற்கொள்கிறார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. சில நடுத்தர குடும்பங்கள் டியூசன் மூலம் தங்களது சந்ததியினருக்கு மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த வழி சமுதாயத்தில் உள்ள கீழ்தட்டு மக்களுக்கு சாத்தியமற்ற ஒன்று.

அனைத்து மொழிக்கும் தனிதனி சிறப்புகள் உள்ளது. நம் தமிழ் மொழி சிறப்பானதுதான், வளமையானதுதான், செழுமையானதுதான் இருப்பினும், நாம் மற்ற மொழிகளை அறிந்து கொள்வதன் வாயிலாக நமது மொழியின் சிறப்பு உயருமே தவிர குறையாது.மொழி அரசியல் நடத்தும் கட்சிகள் ஒழிய வேண்டும், மனிதனை மேம்படுத்தும் அரசியலை உருவாக்கி அந்த அரசியலின் வாயிலாகத்தான் நாம் நமது சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்ட முடியும் என்பது எனது எண்ணம்.

விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செல்லும் வேளையில் ஊர் சுற்றி பார்க்க ஒரு குடும்பம் மதுரையிலிருந்து ஏறியது, அந்த குடும்பத்தலைவர் ஆசிரியராக உயர்பதவியில் இருக்கிறார். பல நல்ல ஆங்கில நாவல்களை வாசித்துள்ளார். ஆங்கில மொழியை மிக சரளமாக பேசக் கூடிய திறமை பெற்றவர். ஆனால் அந்த ஆங்கிலம் அவருக்கு எல்லா இடத்திலேயும் கை கொடுக்கவில்லை. ஒரு பொருளை கூட அவரால் வாங்க முடியவில்லை, இடத்தை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை ஆதலால் நாம் இயன்றவரை ஒரு மொழியை அறிந்து கொள்வது என்பது மிக மிக மேன்மையான விசயம். அந்த மொழியின் வழியாகவே நாம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் இயலும்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube