அம்மாவின் நினைவுகள் – II

மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும்

நிலவை பார்க்கிறேன்

அந்த நிலவில்

ஒளிர்கிறாள் அம்மா..

 

ஆம் அம்மாவின் நினைவுகள் மனதில் சுழன்ற வண்ணம் உள்ளது. பால்யத்தில் இருந்தே அம்மா எனக்கு ஒரு பெரும் துணையாகவும், பலமாகவும் இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல என் அன்னையின் மேல் இருக்கும் எனது அன்பு பெருகியதே தவிற எப்போதும் குறைந்ததில்லை. ஏதோ ஒரு தறுணத்தில் அம்மாவை நான் திட்டியுள்ளேன். அத்தகைய செயலை எண்ணி இப்போது வருந்துகிறேன். அன்னை என்ற மந்திர சொல்லுக்கு இருக்கும் அர்த்தம் , சொல்லிப் புரியாத ஒன்று.

அறையில் காற்றாடி சுழன்று கொண்டுள்ளது. அம்மா இறுதியாக வாழ்ந்த இடத்தில் உள்ளேன். அம்மா இறுதியாக என்னிடம் பேசிய வார்த்தைகள் அறையெங்கும் வியாபித்துள்ளது. நான் அந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு பயணிக்கிறேன்.

அந்த வார்த்தைகள் என்னை சாட்டையால் அடிக்கின்றது, அந்த வார்த்தைகள் எனக்கு வாழ்வை புரியவைக்கிறது. வாழ்வென்னும் மாயையில் நம்மை நாமே கோபம் , கர்வம் என்ற பெரும் மோசமான கவசங்களை நமக்கு நாமே அணிந்து கொண்டு வாழ்கிறோம்.

ஒரு மரணம் வாழ்க்கையை பற்றி யோசிக்க வைக்கிறது. வாழ்க்கையென்பதே கொண்டாட வேண்டியதுதான் என்றாலும் அதில் பிறப்பதும், மறைவதும் மாறிக் கோண்டிருக்கும் நிகழ்வு எனினும் ஒரு மனித ஆன்மா நம்மை விட்டு பிரியும் பொழுது உணரும் வலி மிகப் பெரியதுதான்.

பால்யத்தில் அம்மாவின் கரம் பிடித்து உலகை சுற்றி, இதுதான் உலகம் என அறிமுகப் படுத்தி, உலகத்தில் ஓடவிட்டு, இன்பங்களை அனுபவிக்கவிட்டு , வலியையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாயே அம்மா.

நீ வாழ்ந்த
வீட்டில் உனது
சுவாசத்தை தேடி
அலைகிறேன்..
நீ விட்டுச்
சென்ற சுவடுகளை
பார்த்து பார்த்து
கண்ணீர் வடிக்கிறேன்
என்னால் உனக்கு
காணிக்கையாக்க
கண்ணீரைத் தவிற
ஒன்றுமில்லை

One Response so far.

  1. Rajaguru says:

    Good story


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube