சேவல் கட்டு – ம. தவசி

சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில்
சேவல்கட்டு நாவலை வாங்கினேன். சேவல்கட்டு என்ற பெயரை படித்தவுடனேயே
புத்தகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. சி.சு. செல்லப்பா அவர்கள் ஜல்லிக்கட்டை
மையமாக வைத்து வாடிவாசல் நாவலை எழுதியது போல, ம. தவசி அவர்கள்
சேவல் சண்டையை மையமாக வைத்து சேவல் கட்டு நாவலை படைத்துள்ளார்.
எழுபது வயதான போத்தையாவின் வழியில் பயணிக்கிறது நாவல்.
போத்தையா சேவல்கட்டுக்கு ஏற்ற சேவலை தேடி பயணிக்கிறார். காடுகளை,
மலைகளை, வெயிலைக் கடந்து ஊர் ஊராக பயணிக்கிறார். வெக்கையின் ஊடாக
போத்தையாவின் கால்கள் அலைந்து திரிகிறது. இந்த முறையாச்சும் சேவல்
சண்டையில் ஜெயிச்சிரணும் என அவரது உள் மனம் புலம்பித் தவிக்கிறது. ஏன்
இப்படி சேவல், சேவலுன்னு சுத்தித் திரிகிறோம் என அவர் எப்போதாவது நினைத்
தாலும், ஏதோ ஒரு சக்தி போத்தையாவை சேவலோடு பின்னிப் பிணைந்து
இருக்குமாறு வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயர்களுடன் வரிவசூல் செய்ய அவர்களை தேரில் அழைத்துச்
செல்கிறார் ஆப்பநாட்டு ஜமீன்தாரான சேவுகப்பாண்டியன். ஆங்கிலேயர்களை
ஊருக்கு வெளியேயே இருக்கச் சொல்லிவிட்டு, வரி வசூல் செய்ய ஊருக்குள்
நுழைகிறார் சேவுகப்பாண்டியன். நெடுநேரம் ஆகியும் சேவுகப்பாண்டியன் வராததி
னால் ஆத்திரத்துடன் சேவுகப்பாண்டியனைத் தேடி ஊருக்குள் வருகின்றனர்
ஆங்கிலேயர்கள். மக்கள் நடமாட்டமே இல்லாமல் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்
றன. குலவை சப்தம் மட்டும் தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த குலவை
சப்தத்தை கோபத்துடன் செல்லும் ஆங்கிலேயர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சியைக்
கண்டு சந்தோசம் அடைந்தனர்.

வாவ் வொண்டர்புல்… வொண்டர்புல் என சேவல்கட்டை முதன் முதலாகப்
பார்த்த ஆங்கிலேயர்கள் உவகை கொள்கின்றனர். அங்கு சேவுகப்பாண்டியனும்
சேவல் சண்டையைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சேவலை பிடித்து விடும்படி
மக்கள் கூறுகின்றனர். சேவுகப்பாண்டியனும் மூர்க்கமான சேவல் ஒன்றை பிடித்து
விடும் பொழுது அவரது தலைப்பாகை கீழே விழுகிறது. மக்கள் அனைவரும் சிரித்து
கேலி செய்கின்றனர்.

போய் பொண்டாட்டி சேலைய துவச்சுப் போடு. சேவல புடிச்சு விட தெரியாதவ
ரெல்லாம் ஜமீன்தாராம் என ஊர் மக்கள் கேலி செய்கின்றனர். எப்ப நீ ஒழுங்கா
சேவல புடிச்சு விடுறயோ அப்பத்தான் நாங்க வரி கொடுப்போம் என ஊர் மக்கள்

கூறிவிட்டனர். நேற்று வரை மரியாதை கொடுத்த மக்களே இன்று இப்படி கேலி
செய்கின்றனரே என்ற எண்ணம் சேவுகப் பாண்டியனின் மனதில் பெரும் வலியை
உண்டாக்குகிறது. அரண்மனைக்கு வந்து அன்றைய இரவை தூக்கமில்லாமல்
கழிக்கிறான் சேவுகப் பாண்டியன். விடிந்ததும் தனது சேவகர்களை அனுப்பி
கட்டுக்கு ஏற்ற சேவல்களை தேடி வாங்கி வரச் சொல்கிறான். ஊர் ஊராக
அலைந்து திரிந்து தேடி சேவல்களை வாங்கி வருகின்றனர் சேவகர்கள். சில
இடங்களில் சேவல்களை கொடுக்க மறுக்கின்றனர். அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி,
சேவல்களை வாங்கி வராட்டி எங்களுக்கு வேலை போயிடும் என மன்றாடி
வோங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கி வந்த சேவல்களை கூண்டில் வைத்து
வளர்க்கிறார் சேவுகப்பாண்டியன். பல சேவல்கள் எதுவும் சாப்பிடாமல் இறந்து
விடுகின்றன. அந்த சேவல்களை வாங்கி வந்த சேவகர்களை அடித்து
விரட்டுகிறான். இறுதியில் ஒரு சில சேவல்களே கட்டுக்குத் தயாராகின்றன. அந்த
சேவல்களை தேரில் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சேவல் கட்டுக்கு செல்கிறார்
சேவுகப்பாண்டியன். சேவல் சண்டைக்கு தனது மகன் போத்தையாவையும்
அழைத்துக் கொண்டு திரிகிறார். அப்படிப்பட்ட ஜமீன் வம்சத்தில் பிறந்து, சேவல்
சண்டையில் கண்டிப்பாய் வெற்றி பெற்று அப்பாவின் தீராத ஆசையை நிறைவேற்ற
வேண்டும் என்ற எண்ணத்தோடு போத்தையா இன்றும் சேவல்களைப் பற்றிய
எண்ணங்களையே மனதில் சுமந்தவாறு காடு மேடுகளையயல்லாம் கடந்து
அலைந்து திரிகிறார்.
கொம்பூதி என்னும் ஊருக்கு வந்தடையும் போத்தையா, இந்த ஊர்தான்
சேவக்கட்டுக்கு பேமசு. இந்த ஊருல நமக்கு கண்டிப்பா சேவல் கிடைக்கும்.
இல்லையின்னா நல்ல கோழி முட்டையா வாங்கிக் கொண்டு போக வேண்டியது
தான் என தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார் போத்தையா. ஊரிலிருக்கும்
ஆறுமுகத்திடம் சேவல்களையும், கோழிகளையும், முட்டைகளையும் வாங்கிக்
கொண்டு தனது ஊருக்கு செல்கிறார் புனவாசல் போத்தையா. சாவ போத்தையா.
கண்மாயை, ஆல மரங்களைக் கடந்து ஊருக்கு சென்று கொண்டிருக்கும்
போது போத்தையாவின் நினைவுகளில் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்
சேவுகப்பாண்டியன். காட்சி பின்னோக்கி செல்கிறது. சேவல்கட்டில் தோல்வியுறு
வதும், பின் மீண்டும் சேவல்கட்டிற்கு ஆயத்தமாவதும் என தனது எண்ணங்கள்
செயல்கள் அனைத்தும் சேவலுக்காகவே என்று மாறிவிடுகிறார் சேவுகப்பாண்டியன்.
தனது கணவன் ஒரு மனிதச் சேவலாகவே மாறிவருவதை ஐயமுடன் கண்டு
கொண்டு, எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள் மனைவி வேலாயி. சேவல்
சண்டைக்காக தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் இழந்து, மனம் பிறழ்ந்து
பைத்தியமாகி இறுதியில் இறந்துவிடுகிறார் சேவுகப் பாண்டியன். அந்த பழைய
காட்சிகள் போத்தையாவின் நினைவில் சுழன்றபடி இருக்கின்றன.
தொடர்ந்து சேவல்களை தயார் செய்து சேவல் கட்டில் ஜெயிக்கிறார்
போத்தையா. சேவுகன் மகன் என்ன சாமான்யனா… சேவக்கட்டுன்னா சேவுகன்
பேரும் போத்தையா பேரும் எப்போதுமே இருக்கும்டா என ஊர் மக்கள்
பேசுகின்றனர். போத்தையா சேவல் சாதாரண சேவல் இல்லப்பா, அதுக்குள்ள

மனுசன் ஒளிச்சிருக்கான்யா அதுனாலதான் இவ்வளவு வேகம். சேவல் சண்டை
இரு சேவல்களுக்கு இடையே நடக்கும் சண்டை மட்டுமல்ல. அது மாபெரும்
மூர்க்கமான போர். சேவல்களுக்கென்று தனிக்குணம் எதுவுமில்லை. அதை
வளர்ப்பவனின் கோபம், மூர்க்கம் எல்லாம் சேர்ந்துதான் சேவலின் ரெளத்திரத்தை
கூட்டுகிறது.
போத்தையா பெருமிதத்துடன் உள்ளார். போட்டி நடக்கும் இடத்தில் இருக்கும்
ஆலமரக் கொப்புகளில் அமர்ந்து தன் தந்தை சேவுகன் தன்னை பார்ப்பது போன்ற
ஒரு பிரமை அவருக்குள் வந்து சேர்க்கிறது. நாவலின் இறுதியில் மனம் பிறழ்ந்து
இத்தி மரத்தில் போத்தையா தூக்கில் தொங்கி இறந்துவிடுகிறார். அவரது காலடியில்
தலை அறுக்கப்பட்ட சேவல் ஒன்று உறைந்த ரத்தத்தோடு கிடக்கிறது.
பழைய பண்பாட்டு நிகழ்வுகளை எல்லாம் மறந்து, எந்திரமயமான இந்த
உலகத்தில் குழந்தைகளை வீடியோகேம் என்னும் கணினி விளையாட்டுகளில்
மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நாம், சேவல்கட்டு நாவலை வாசிக்கும் பொழுது ஒரு
விளையாட்டு மக்களின் வாழ்வில் பண்பாட்டில் எவ்வளவு ஒன்றி இருந்திருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நாவலில் சேவல்கட்டு பற்றிய முழு விபரமும் அடங்கியுள்ளது. சேவல்களை
எப்படி சண்டைக்கு ஏற்ற சேவலாக வளர்ப்பது. சேவல்களின் குணாதிசயங்களை
எப்படி கண்டு கொள்வது போன்ற விபரங்கள் அருமையாக எடுத்தாளப்பட்டு, நாவல்
அழகியலோடு நகர்ந்து செல்கிறது.

————————————————–

சேவல் கட்டு
புதுமைப் பித்தன் பதிப்பகம்
ப.எண் : 57, 53 வது தெரு, 9 வது அவென்யூ
அசோக் நகர், சென்னை Š 600 083

————————————————–

 

5 Responses so far.

 1. Ragupathy M says:

  Sir intha book engu kidaikkum

 2. சுரேஷ் பெரியசாமி says:

  இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவலை எனது மின்னஞ்சல் முகவரியில் தெரியபடுத்துமாறு ஆசிரியரிடம் அன்புடன் கேட்டுகொள்கிறேன்…நன்றி…

 3. சுரேஷ் பெரியசாமி says:

  நான் தேடும் பல தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என நம்புகிறேன். ஆகவே இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவலை எனது மின்னஞ்சல் முகவரியில் தெரியபடுத்துமாறு ஆசிரியரிடம் அன்புடன் கேட்டுகொள்கிறேன்…நன்றி…

 4. Ram Thangam says:

  அருமையான விமர்சனம் .மொத்த நாவலையும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் நிச்சயம் வாங்கி வாசிக்கப்பட வேண்டும்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube