நேற்று மாலை எனது நண்பனை சந்தித்தேன். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவன் சிறிது கலக்கமடைந்திருந்தான், ஏண்டா மச்சான் என்ன ஆச்சு என கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான்னு கூறிக் கொண்டே என் காதில் வந்து மச்சான் வாழ்க்கையில முதன்முதலா சிகரெட் அடுச்சு கேவலப்பட்டுட்டண்டா என்றான், என்னடா மச்சான் சிகரெட் அடிக்கிறதெல்லாம் கேவலமாடா என்றேன்.

எனக்கு சிகரெட்டுக்கும் ராசியே இல்ல மச்சான் , நான் சின்ன வயசுல இப்படித்தான் ஒரு தடவ சிகரெட்அடுச்சு மாட்டிக்கிட்டு வீட்டுல செமத்தியா வெளக்கமாத்து அடி வாங்கினேன். அப்ப இருந்து சிகரெட் பிடிக்கவே பிடிக்காது இருபத்தெட்டு வயசு வர ஒரு சிகரெட் கூட பிடிக்கல என்றான்.

இவ்வளவு நல்லவனா இருந்த நீ ஏண்டா சிகரெட் குடுச்ச என்றேன். எல்லாமே இந்த காதல்னாலதாண்டா ,ஏண்டா காதல்ல தோத்துட்டா சிகரெட் குடின்னு யார்ரா சொன்னாங்க என்றேன். அவன் மௌனமானான். இல்ல மச்சான் எல்லாம் ஒரு பீலிங்தாண்டா என்றான்.

சரி இருக்கட்டும் பீலிங்க விடு கேவலமான விசயத்தை மொதல்ல பேசுவோம் என்றேன். லீவு முடுஞ்சு கெளம்புறப்பதாண்டா உயிருக்கு உயிரா லவ் பண்ண அந்த பொண்ணு என் காதல ஏத்துக்காம ஏமாத்திட்டாடா என்றான். இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்டா இதுக்கெல்லாமா இவ்வளவு பீல் பண்ணுற என்றேன்.

நண்பன் தொடர்ந்தான். புண்பட்ட மனதை புகைபிடித்து ஆற்று என யாரோ சொன்னது ்ஞாபகத்துல வந்துச்சு, உடனே கையில இருந்த காசுல எது விலை அதிகமான சிகரெட்டுன்னு கேட்டு ஒரு பாக்கெட் வாங்குனேன். இரயிலுக்கு நேரமானதால உடனே கெளம்பிட்டேன். ஆனா பையில சிகரெட் வரவும் வேமா குடிக்கணுமுன்னு தோணுச்சு , உடனே பாத்ரூமுக்கு போயி சிகரெட்ட பத்தவச்சு ஒரு இழு இழுத்தேன்.

அவ்வளவுதான் கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு, வேமா கையில இருந்த சிகரெட்ட பாத்ரூம் ஓட்ட வழியா கீழ போட்டுட்டு வேமா கதவ திறந்தேன். வெளியில ரெண்டு போலீஸ்காரெங்க நின்னுகிட்டு இருந்தாங்க, சிகரெட் குடிச்சையான்னு கேட்டாங்க ஆமாமுன்னேன்.

ஒருத்தன் பெரியா எமோசனல் ஆகி பெரிய இவன் மாதிரி பேசுனா, எனக்கு அவன ஓங்கி ஒரு அடி அடிக்கலாமான்னு தோணுச்சு , ஆனா தப்பு செஞ்சுட்டனே அதனால அமைதியா எப்படியோ சமாளுச்சு நின்னு தப்புச்சேன். அந்த வெலங்காத போலீஸ்காரன் அந்த சிகரெட் பாக்கெட்ட வாங்கிட்டு போயிட்டான்.

டேய் நம்ம  இரயிலுல சிகரெட் குடிக்க கூடாதுன்னு தெரியுமுல்ல, பின்ன எதுக்கு குடுச்ச என்றேன் ஏதோ ஆர்வக் கோளாறுல செஞ்சுட்டேன் என்றான்.

சரிடா மச்சான் காதல் கீதல்னு எதுவுமில்ல மச்சான் , லைப்ன்றது ஒரு ஜர்னி கொஞ்ச நாள்தான் இருக்கப் போறோம் அது வர சந்தோசமா இருக்குறத விட்டுட்டு, போனால் போகுது போடா எனக் கூறி, கண்ணதாசன் எழுதிய அந்த பாடலையும் அவனுக்கு நினைவு படுத்தினேன்.

சரி அதெல்லாம் விடு இப்ப குடிக்கிறயா வா கடைக்கு போவோம் என்றேன். அவன் எனக்கும் சிகரெட்டுக்கு ஏழாம் பொறுத்தமா இருக்கு என்றான்.  சரிடா மச்சான் எப்படியோ திருந்திட்ட என்றேன்.

அதற்கு அவன்,   சிகரெட்டுக்கும் எனக்குந்தான் ஏழாம் பொறுத்தமா இருக்கு,  அதனால  சர்ச்சில் மாதிரி சுருட்டு குடிக்க போறேன் என்றான்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube