கதைகள் வெறும் கதைகள் மட்டுமன்று, அவை வாழ்வின் சாரத்திலிருந்து எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாகும். சமீபத்தில் நண்பர்  ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒரு நல்ல வாசகர். அவரது அறையில், புத்தகங்கள் நிறைய வைத்திருந்தார்.

அந்த புத்தகங்களில் இருந்து கதை நிலம் என்ற புத்தகம் என்னை கவர்ந்தது

அந்த புத்தகத்தின் முகப்பு அட்டையில் மணமகன், மணமகள் என்ற பெயர்களை அச்சிட்டு இருந்தார்கள். ஒரு திருமண விழாவிற்கு இந்த புத்தகத்தை அச்சிட்டு கொடுத்துள்ளார்கள். மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும், திருமணவிழாக்கள், திருவிழாக்கள் என ,மக்கள் கூடும் இடங்களில் புத்தகங்களின் மேன்மைகளை பற்றி எடுத்துரைக்கும் நிகழ்வுகளை நாம் செய்து கொண்டே வரவேண்டும் என்பது எனது ஆவல்.

அந்த புத்தகத்தில் முதல் கதை ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் அவர்களின் கதை.  அந்த “அதிசய தானியம்” கதையை வாசித்தேன்.

இன்றைய கால கட்டத்தில் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான சிறுகதையாகும்.  கதையின் சாராம்சத்தை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

—————————————————————————————-

ஒரு நாட்டில் , ஒரு விவாசாயிக்கு அதிசய தானியம் ஒன்று கிடைத்துள்ள செய்தியறிந்து , அந்நாட்டின் ராஜா மந்திரிகளை அழைத்து  இந்த அதிசய தானியம் இப்போது பயிரிடுவதில்லை. இந்த அதிசய தானியம் இவ்வளவு ருசியாக உள்ளதே, இதை மீண்டும் பயிரிட முடியுமா? இந்த அற்புதமான தானியத்தின் பெயர் என்ன எனக் கேட்கிறார் மந்திரிகளிடம்.

மந்திரிகளும் கால அவகாசம் கேட்டு, நாடு முழுவதும் சுற்றி வந்தும், பல சாஸ்த்திர நூல்களை வாசித்தும் அவர்களால் தானியத்தின் பெயரையும் அதன் வரலாறையும் கண்டு கொள்ள இயலவில்லை.

மீண்டும் அரசவையை கூட்டிய மன்னன் தானியத்தை பற்றி நம் நாட்டிலேயே உள்ள வயதான விவசாயிடமே  இதைப் பற்றி விசாரிக்கலாம் எனக் கூறி அந்த விவசாயியை அழக்கிறார்.

தள்ளாடியபடியும், உடல் நடுங்கியபடியும் வரும் விவசாயியை அரசர் இந்த தானியத்தை பற்றி தெரியுமா என கேட்கிறார். அதற்கு அந்த விவசாயி என் காலத்தில் இப்படி தானியத்தை நான் பயிரிடவில்லை. எனது தந்தையை கேட்டால் தெரியும் என சொல்கிறார்.

அரசர் முன் அவரது தந்தை அழைத்து வரப்படுகிறார். தள்ளாடாத தேகத்துடன் வந்த அவரது தந்தைக்கு கண் சரியாக தெரியவில்லை. தானியத்தை தொட்டும் முகர்ந்தும் பார்த்த அவர் என் காலத்தில் இது போன்ற அற்புதமான நறுமணமுடைய தானியம் பயிர் செய்யவில்லை எனவும், இந்த தானியத்தை பற்றி எனது தந்தையிடம் விசாரித்தால் தெரியும் என சொல்கிறார்.

அவரது தந்தை வரவழைக்க படுகிறார். நல்ல திடகாத்திரத்துடன் வந்த அந்த முதியவர். தானியத்தை பார்த்துவிட்டு சந்தோசத்துடன் தானியத்தின் பெயரையும் வரலாறையும் கூறிவிட்டு, இப்போதுள்ள இயற்கை சூழ்நிலையில் இந்த தானியிம் நமது தேசத்தில் பயிர் செய்ய இயலாது எனவும் கூறினார்.

அரசரும் அவரது பதிலை ஏற்றுக் கொண்டு ஒரே ஒரு கேள்வி அந்த முதியவரிடம் கேட்கிறார். “ஐயா தங்களது மகனும் பேரனும், இப்படி தள்ளாடிய உடல்நிலையுடனும், பார்வையிழந்தும் வாழும் வேளையில் தாங்கள் மட்டும் எப்படி இத்தனை வருடங்களாகியும் நல்ல உடல்நிலையுடன் வாழ்கிறீர்கள் என கேட்டார்,

அதற்கு அந்த முதியவர் “ நாங்கள் வாழ்ந்த காலத்தில் சக மனிதர்களை நேசித்தோம்,போட்டி இல்லை, அனைவரிடமும் ஏற்றத்தாழ்வின்றி அன்பு பாராட்டி பகைமை என்றால் என்ன எனத் தெரியாமலேயே வாழ்ந்தோம், இயற்கை எங்களுக்கு உதவியது நன்றாக உழைத்தோம் வாழ்க்கையை கொண்டாடி ரசித்து வாழ்ந்தோம் ஆனால் இன்றைய சூழல் தான் தங்களுக்கு தெரியுமா என்றார் புன்னகையுடன்

*******************

3 Responses so far.

 1. velmurugan.k says:

  நல்ல பதிவு

 2. ஷாஜஹான் says:

  தல்ஸ்தோய் காலத்திலேயே இப்படியா… சரிதான். அண்மையில் என் பேஸ்புக் தோழி மரியா சிவானந்தன் என்பவர், தன் மகள் திருமணத்தின்போது வெளியிட்ட கவிதை நூலின் பிடிஎப் வடிவத்தை அனுப்பி வைத்தார். மற்றொரு திருநெல்வேலி நண்பர், அவருடைய தந்தையார் மறைவை முன்னிட்டு சைவப் பாடல்களிலிருந்து தொகுத்து நூலாக அனைவருக்கும் வினியோகித்தார்.

 3. இந்த மன ஒற்றுமையை இன்றைய நவீனமும்,உலக மயமும் சிதைத்திருக்கிறது.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube