ஞாபக மலர்கள் ..

மழைத்துளி download (1)
ஜன்னலின் வழியாய்
தெரித்து விழுகிறது
மண் வாசம் எழுந்து
மனதை மயக்குகிறது

எப்போதோ தொலைத்த பொழுதுகளும்
உறவுகளின்
் நினைவுகளும்
மழையின் வழியாய்
மனதில் உயிர்த்தெழுகிறது

பால்ய நினைவுகளையும்
ஓடையில் நீர் பெருகி
ஓடும் சப்தத்தையும்
மனதில்
கேட்க முடிகிறது..

மலைக்கு அருகிலிருக்கும்
செம்மண் வளமிக்க தோட்டம்
தோட்டத்தில் நிறைந்திருக்கும்
தென்னை மரங்கள்
தென்னையின் ஊடே
பூத்திருக்கும்
கனகாம்பரப்பூக்கள்

பசுமையான புற்கள்
நிறைந்த வரப்புகள்
வரப்புகளில் மாடு
மேய்த்துக்கொண்டிருக்கும்
மாயாண்டித் தாத்தா..
தாத்தா எப்போதும் சொல்லி
மகிழ்ந்த ஊர்க்கதைகளென
எல்லாமே இருந்த கிராமம்
நாகரீக வசீகரத்தில் சிக்கி
எல்லாம் இழந்து
நகரமாக
மாறிய பின்னும்
ஞாபக இடுக்குகளில்
புதைந்திருக்கும்
கிராமம்
இன்னும் மண்ணையும்
மனிதர்களையும்
நேசிக்கத்தான் சொல்கிறது..

One Response so far.

  1. ஞாபக இடுக்குகளில் புதைந்திருக்கும் பல விஷயங்கள் இன்னும் இன்னுமாய் மனிதர்களையும் அவர்கள் சார்ந்த இன்ன பிற்ஃஅவைகளையும் நேசிக்கக்கற்றுக்கொடுக்கிறதுதான், மண் பிளந்து துளிர்த்து நிற்கிற இரண்டு தளி இலைகள் கூட/


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube