390_thumb_1குழந்தைகளின்
குரல்களற்ற
தெருக்கள் வரண்ட
நதிபோல்
வீழ்ந்து கிடக்கின்றன..

தூளி ஆட
ஆளில்லாமல்
ஆலமர விழுதுகள்
பொலிவற்றுள்ளன..
தங்களை எண்ணி எண்ணித்
தோற்க யாருமில்லாமல்
வானத்து
நட்சத்திரங்களனைத்தும்
தனித்துள்ளன…
தொலைபேசிகளில்
தொலைந்து போன
குழந்தைகள்
அறியவில்லை
அறிவியலின்
வளர்ச்சியால்
அகற்றப்பட்ட
பால்யத்தின்
பசுமையை….


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube