Kittur-Raniஇதோ இந்தச் ”சுவரைத்
தாண்டித்தான் குதிரையில்
தன் வளர்பு மகனோடு
தப்பிச் சென்று மீண்டும்
படையெடுத்து வென்று
கோட்டையைக் கைப்பற்றினார்
லட்சுமிபாயென” யோகேந்திர யாதவ்
கூறிய பொழுது
வெய்யில் ஏறியிருந்தது
மஞ்சள் அரளிப்பூக்கள்
கோட்டைச் சுவரில் சாய்ந்தவாருப்
பூத்திருந்தது…..

சுவரிலேறி
செல்பி எடுத்தனர்…

இங்குதான்
குதிரைப்படையிருந்தது
இதுதான் ஆயுதக்கிடங்கு
இந்த மைதானத்தில்தான்
லட்சுமிபாய் வாள் பயிற்சி
எடுப்பார்…
இதுதான் லட்சுமிபாய்
உயிர் நீத்த தன்
படைத்தளபதிகளுக்கு
கட்டிய சமாதியென
யோகேந்திர யாதவ் கூறிய பொழுது
குரங்கும் அணிலும்
ஒன்றோடொன்று விளையாடிக்
கொண்டிருந்தன
மைதானத்தில் ….

தொலை தூரத்தில்
இங்கிலாந்துக்காரன்
குளிர்பானக் கம்பெனிக்காகப்
போட்ட ஆள்துழைக்கிணறு
உருமிக் கொண்டிருந்தது
”ஜான்ஸியைத் தரமாட்டேன்”  எனப்
போரிட்ட லட்சுமிபாய் தன்
குதிரையில் ஜான்ஸிராணியாக
வாளெடுத்து நின்றிருந்தார்
சிலையாக…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube