ஊர்க்கனவு..

1284781533y2fs5s
“எப்பப்பா வந்த”
“நல்லா இருக்கையா”
எனக்
கேட்கும்
முகங்களால்
இன்னும் அழகாகிவிடுகிறது
ஊர்க்கனவு..
***********************************************

எப்போதோ கடந்து சென்ற
பொழுதுகளை
நினைக்கவைக்கிறது
பால்ய நண்பர்களின்
முகங்கள்..

**************************************************

எத்தனை தூரம்
பயணித்தாலும்
எப்போதும் மனதில்
படிந்திருக்கிறது
ஊர்க்கனவு
**************************************************

ஏனோத் தெரியவில்லை
பிடிக்காத வாத்தியார்
வீட்டை கடந்து
செல்லும் போதும்
அவரிடம்
பேச வேண்டுமென்ற
ஆர்வம்
துளிர்விட்டு விடுகிறது

***********************************************
பிழைப்பிற்காக
ஊர்விட்டு ஊரோ
நாடுவிட்டு நாடோ
சென்ற
பங்காளிகளையும்
நண்பர்களையும்
காணச்செய்யும்
திருவிழாக்கள்
அதீத
அழகாய் மிளிர்கின்றன

***********************************************

காதலியின்
வீட்டுத்
திண்ணையில்
அமர்ந்து
தேநீர்
பருகுவதும்
தியானம்தான்

***********************************************

One Response so far.

  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube