கதவு..

 

மாட்டுவண்டியாகdownload (1)
டவுன்பஸ்ஸாக
இரயிலாக
விமானமாக
கப்பலாக
புல்லட்டாக
பயணித்தது
வார்னீஸ் அடிக்கப்பட்ட
அந்த அழகிய கதவு…

அழகர்சாமி ஆசாரியின்
பேரன்
சுந்தரம் ஆசாரி
கதவைச் செய்ததாக
தாத்தா
சொல்லியதாக நினைவு..

பிடித்தமான படங்களை
சோற்றுப்பருக்கை கொண்டு
தன் மேல் ஒட்டி ரசிக்கச்
செய்தது  அந்தக் கதவு..

கதவில்
புள்ளிமான் போன்ற
வடிவில்
கைப்பிடியிருந்தது
அந்தப்
புள்ளிமானை
வேட்டையாடும் போது
பெரும் வனமாக மாறிய
கதவில் படிந்துள்ளன
நிகரில்லா
பால்யகாலங்கள்..

 

 

4 Responses so far.

  1. jothiprasath says:

    அருமை தம்பி… கவிஞர்கள் என்றாலே பொய்யர்கள் என்ற கருத்து எனக்கு உண்டு…., மிதமிஞ்சிய கற்பனைகள் இருக்கும்…,
    ஆனால் உனது கவிதைகள் நிஜத்தை ஒட்டியே பயணிக்கிறது….அலங்காரத்திற்கு மட்டும் கற்பனை….,
    இதுபோலவே தொடரட்டும் உனது எழுத்துக்கள்…

    ஜோதிபிரசாத்
    வாசகர்

  2. j Shajahan says:

    கி.ரா.வின் கதவு சிறுகதை மை நினைவூட்டுகிறது.வாழ்த்துக்கள்.

  3. Siva says:

    Thank you for remembering those day near to you… amazing photo collection anna…

    Siva

  4. jeyaram om says:

    Super keep it up best wishes ….


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube