பிடி….

கவிஞனைப் பிடித்திருந்தால்தான்mahakavi
கவிஞனாக முடிகிறது…
கதையாசிரியனைப் பிடித்திருந்தால்தான்
கதையாசிரியனாக முடிகிறது..
ஓவியனைப் பிடித்திருந்தால்தான்
ஓவியனாக முடிகிறது..
நடனக்காரனைப் பிடித்திருந்தால்தான்
நடனக்காரனாக முடிகிறது..
இசைஞனைப் பிடித்திருந்தால்தான்
இசைஞனாக முடிகிறது…
ஊர்சுற்றியைப் பிடித்திருந்தால்தான்
ஊர்சுற்றியாக முடிகிறது..
பிடித்திருந்தால்தான் எல்லாம் ஆக
முடிகிறது..
பிடியிருந்தால்தான் பற்றியேற
முடிகிறது..
எகிறிக் குதிக்க
முடிகிறது..
எல்லாவற்றுக்கும் தேவை ஒரு
பிடிதான்..
இருள் மறையச்செய்யும்
வெளிச்சமது
பற்றி எரியச் செய்யும்
ரசாயனமது..
பிடி பிடி பிடி
இரு இரு இரு
பிடியை இருப்பாக்கு
இருப்பைப் பிடியாக்கு..

 

—————————————————————–

நன்றி: மகாகவி மே இதழ்

—————————————————————-

One Response so far.

 1. ramani says:

  அருமை
  கவிதையின் பால் ஒரு அபரீதமான பிடி
  இருப்பதால்தானே
  இப்படிப்பட்ட
  வித்தியாசமான அருமையான
  கவிதையும் சாத்தியமாகிறது
  வாழ்த்துக்களுடன்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube