புத்தனின் புன்னகை..

 

இரவுக் காவலில்BuddhaRadiation
கைத்துப்பாக்கியோடு
புத்தனைப் பார்த்தேன்
புத்தன் புன்னகைத்தான்
எதற்கு என்னை நோக்கி
புன்னகைக்கிறாயென்றேன்?

பதிலேதுமின்றி
மீண்டும் புன்னகைத்தான்..

கோபம் கொண்டு
புத்தனை நோக்கி
துப்பாக்கியை
நீட்டினேன்
மீண்டும்
புன்னகைத்தான்
தோட்டாவை நிரப்பி
குறிப்பார்த்தேன்
மீண்டும்
புன்னகைத்தான்
மனம் குரோதம்
நிரம்பி வழிய
எத்தனித்த போதும்
புத்தன்
புன்னகைத்துக்
கொண்டேயிருந்தான்
உனக்கு பயமே
இல்லையா
புத்தா என்றேன்?
உன்னை நீயே
சுட்டுக்கொள்ளும் போது
எனக்கேன் பயமென
மீண்டும்
புன்னகைத்து
அமர்ந்திருந்தான்
சாந்தமாக
அரசமர அடியில்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube