கடவுள்..

unnamed

நீண்ட
தியானத்திற்குப்பின்
விழிதிறந்த
கடவுள்
தன்
தூரிகை கொண்டு
வரையத்துவங்கினான்
பெரு வட்டம்
வரைந்து
பூமியாக்கினான்..
அதனுள்
மரத்தை வரைந்தான்
மரம் உயிர்த்தது..
நதியை
சுரக்கச்செய்தான்
பெருகி வழிந்தது…
மலையை
உருவாக்கினான்
கம்பீரமாய் நின்றது..
பறவையை
பறக்கச்செய்தான்
சிறகை சிலுப்பி
உயரப் பறந்தது…
நிலவை
சூரியனை
வனத்தை

மானை

தேனீயை
வரைந்து
கொண்டேயிருந்தான்
எல்லாம்
உயிர்
பெற்று
இயற்கையாய்
பரிமளித்தது..
இறுதியில்
மனிதனை
வரைந்தான்
மனிதன்
உயிர்பெற்று
இயற்கையை
தனதாக்கி
கடவுளையே
வரையத்தொடங்கினான்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube