கனகரத்தினம்..

koodal

நெரிசல் மிகுந்த
பேருந்து பயணத்தில்
மீண்டும்
கனகரத்தினத்தைப் பார்ப்பேன்
என எண்ணியும் பார்க்கவில்லை..
ஏதேச்சையாகத்தான்
பார்த்தேன்
இடுப்பில்
கைக்குழந்தையுடன்
பேருந்துக் கம்பியை
லாவகமாகப் பிடித்துக்கொண்டு
கனகரத்தினம் நின்றிருந்தாள்..

இதே பேருந்தில்
அவள் தரிசனத்திற்காக
ஏங்கியிருந்த கண்கள்
எல்லாம் தொலைந்து
போயிருந்தன..
வெள்ளை ப்ளவுசும்
புளு கலர் தாவனியில்
கனகரத்தினம்
தேவதைபோல்
நின்றிருப்பாள்..

அவள் கேசத்தில்
கனகாம்பரமோ..
மல்லிகையோ
மஞ்சள் ரோஜாவோ
எதாவது ஒன்று
எப்போதும்
அலங்கரித்துக்
கொண்டிருக்கும்..
அவள் முகத்தைப்
போலவே மாலைவரை
பூக்களும் பொலிவோடிருக்கும்..

கனகரத்தினத்தோடு
பேசுவதற்கும்
கனகரத்தினத்தின்
கொஞ்சல் பார்வைக்கும்
புன்னகைக்கும்
ஏங்கித் தவிக்கும் மனது..

பேருந்து குலுங்களில்
எதேச்சையாக
பார்வையை திருப்பியவள்
“ஏ ஜோதிராஜ் எப்படி
இருக்க என
புன்னகைத்தாள்…
கனகரத்தினத்தின்
குழந்தையை மடியில்
வாங்கிக் கொண்டேன்
அவளும் புன்னகைத்தாள்
நானும் புன்னகைத்தேன்
குழந்தையும் புன்னகைத்தது.

2 Responses so far.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube