பெரியவர்….

நரைத்த தலையில்C7A78T5V4AEr42e
சுதந்திரமாக
அலைந்து கொண்டிருக்கும்
கேசத்தை
துண்டால் துடைத்துக்கொண்டும்
சானை பிடிக்கும்
இயந்திரத்தை தூக்கிக்கொண்டும்
மிக மிக எளிய மனிதராக
தெருவில் நடந்துவருவார்…

செருப்பில்லாத அவர்
கால்களில்
அன்போடு ஒட்டியிருக்கும்
தெருப்புளுதிகள்..

கிராமத்தில்
ஏதாவதொரு தெருவில்
அவர் சப்தமிட்டாலும்
வீட்டில் உள்ள
அருகாமனைகள்
திண்ணைக்கு வந்துவிடும்..

அவர் பின்னே
ஓடிவரும்
சிறார்களை
புன்னகைத்துக்கொண்டே
கடந்து செல்வார்..

அவரது சிங்கப்பல்
தெரியும் புன்னகை
இன்னும் மனதில்
நிழலாடுகிறது..

அவரிடும் சப்தத்தை
எந்த ராகத்தில்
வைக்கலாம் என
பட்டிமன்றமே
நடத்தலாம்…

அவர்
சப்தம் தொலைத்த
இந்த தெருக்கள்
வாசிப்பவனில்லாத
புல்லாங்குழல்கள்..

 

One Response so far.

  1. Rathi Devi says:

    அவர் சப்தம் தொலைத்த இந்த தெருக்கள் வாசிப்பவனில்லாத புல்லாங்குழல்….அருமை


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube