மழைக் கவிதைகள்…

மரப்பெண்களை
நாணச்செய்கிறான்
இம்மழைக்காரன்…green-rain

******

எல்லாவற்றையும்
கழுவிச் செல்கிறது
இம் “மா” மழை..

*****

பிடித்த பெண்ணின்
அருகில் நின்று
மழைப் பார்ப்பது
தரிசனம்..

******

கிராமத்தில்
குடம் எடுத்து
மழை நீர்
பிடித்த நினைவுகளை
மீட்டுகிறது
இம்மழை வீனை..

*****

தன்
துப்பட்டாவினால்
தலை துவட்டிவிடும்
தாயின் ஸ்பரிசத்திற்காக
மீண்டும் மீண்டும்
நனையலாம்
இம்மழையோடு..

*****


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube