அதிகாலை..

 

இந்த நிசப்தமானkavithai-book
அதிகாலைதான்
எத்தனை எத்தனை
நம்பிக்கயை அளிக்கிறது..

இந்த இருளும் வெளிச்சமும்
கலந்த அதிகாலைதான்
எத்தனை எத்தனை
கனவுகளை அளிக்கிறது..

ஹாச்சூ நதியும்
அமைதியாய்
சப்தமெலுப்பாமல்
அதிகாலையை
தியானித்துக்கொண்டு
ஓடிக்கொண்டுள்ளது..

பறவைகள்
நதிக்கரையோரம்
சிறகுகளை படபடவென
அடித்துக்கொண்டு
வந்தமர்ந்து நதியிடம்
மௌனத்தில்
சம்பாசிக்கின்றன..
இந்த அதிகாலைதான்
எத்தனை அழகானது..

காதலியின் முத்தம்
மனைவியின் புரிதல்
மகனின் அன்பு
அப்பாவின் கருணை
அம்மாவின் பாசம்
அத்தனைபேரின்
முகங்களும்
இந்த பசுமையான
மலை முகடுகளில்
தெரிகிறது..

2 Responses so far.

 1. AMMU MARY says:

  அதிகாலை பொழுதை ரவிவர்மனின் தூரிகை போல வரைந்துவிட்டீர் உம் எழுத்தில்………

 2. AMMU MARY says:

  வணக்கம் !!
  உஙகள் தமிழின் மீது ஒரு இணக்கம் உண்டு எனக்கு.

  அதிகாலை பொழுதை ரவிவர்மனின் தூரிகை போல வரைந்துவிட்டீர் உம் எழுத்தில்………


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube