முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டுவிட்டு
காய் கழுவப் போனேன்
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிக குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்து விடடது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன் .
– முகுந்த் நாகராஜன்.
பிரியத்தின் வாசனையை சுமந்து கொண்டுதான் பயணங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு பயணமும் புதிய மனிதர்களையும் அனுபவங்களையும் தந்துகொண்டுதான் உள்ளன. இராணுவத்தில் சேர்ந்தபின் புத்தகங்களின் தோழமையை ஏற்றுக்கொண்டேன். பதின் பருவ சேட்டைகளை எல்லாம் இராணுவத்தில் கிடைத்த தனிமை உடைத்தெறிந்தது. முதன் முதலில் வீட்டை பிரிந்து நெடுந்தூர முதல் இரயில் பயணம் மனதில் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் ஒரு சேர தந்துகொண்டிருந்தது.காண்ணதாசனும், வைரமுத்துவும் பிரிவின் வாலிக்கு அப்போது மருந்திட்டார்கள். கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமததத்தின் வழியாய் அவரது வாழ்க்கை அனுபவங்களை குழைத்து என்மேல் பூசிக்கொண்டேன் .
தனிமையும் பிரிவும் சூழ்ந்த அந்த நாட்களில் அவர் மிகவும் உறுதுணையாய் இருந்தார். பின் வாழ்க்கையின் அழகை நா.முத்துக்குமாரின் வரிகள் படம்பிடித்துக்காட்டின. ஜபல்பூரில் இருந்த காலங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் துணை எழுத்தும், கதா விலாசமும் வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொடுத்தன.பின் பணி நிமித்தமாய் டெல்லி சென்றபொழுது எம்.ஏ.சுசிலா அம்மா அவர்களும், வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சுசிலா அம்மாவின் வழியாய் ரஷ்ய இலக்கியங்கள் அறிமுகமானது. ரஷ்ய இலக்கியங்கள்தான் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
டெல்லியில் பணிபுரிந்த காலத்தில் வடக்கு வாசல் இதழ்களில் கவிதைகளை பிரசுரித்து எழுதும் ஆர்வத்தை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் பென்னேஸ்வரன் ஐயா அவர்கள்.வடக்கு வாசல் அலுவலகத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மனம் உற்சாகத்தில் மகிழும் இலக்கிய நேசமிக்க மனிதர்களோடு பழகும்போது தனி உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
பயணம் இதழின் ஆசிரியர் சுரா அவர்கள்தான் முதல் கவிதையை பத்திரிக்கையில் பிரசுரம்செய்தார். அவரை சந்திக்க மல்லாங்கிணரில் இறங்கி கண்மாயை கடந்து மேலத்துலுக்கன்குளத்திற்கு வெயிலேறிய பொழுதில் சந்தித்த காட்சிகள் இன்னும் நிழலாடுகிறது.
காட்டாறு என்ற ஒரு சிறுகதைத்தொகுப்பும் ;சில மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கும் திரு. ஜே.ஷாஜஹான் அவர்கள் மிக முக்கியமான தமிழ் படைப்பாளர்களுள் ஒருவர். அவரது கதைகள் எப்போதும் உடன் வந்துகொண்டே இருக்கும். பயணங்கள் புதிய மனிதர்களை நமக்கு காண்பித்துக்கொண்டே உள்ளது. ஆம் நிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை ..(மலரும்