alagiyasingarநவீன விருட்சம் என்கிற இலக்கிய இதழின் ஆசிரியரும், நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றிவருபவரும், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து புதிய படைப்பாளர்களை உருவாக்கிவருபவருமான திரு அழகியசிங்கர் அவர்கள் எனது இரண்டாவது தொகுப்பாகிய ஜான்சிராணியின் குதிரை கவிதை நூலில் எழுதியுள்ள ஒரு கவிதையை தன் மனதிற்கு பிடித்த கவிதையாக தேர்ந்தெடுத்து அவரது தளத்தில் பதிவு செய்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழின் சிறந்த படைப்பாளரும் இதழாளருமான அழகியசிங்கர் அவர்களால் முன்னிருத்தப்படுவது பெரும்பேறு.

நன்றி 

—————————————————————————————–

வளைந்த
மரக்கிளையில்
அமர்ந்து கொண்டு
சப்தமிடுகிறது
ஒரு சிட்டுக் குருவி…
.விடுபட்ட
சொந்தங்களை
சப்தமிட்டு
அழைக்கிறது…

யாரும் வராத
கணத்தில்
ஏக்கத்தோடு
பறந்து செல்கிறது
மரக்கிளையை
விட்டு.

மனதிற்கு பிடித்த கவிதைகள்

 

—————————————————————————————–

நன்றி : ஜான்சிராணியின் குதிரை – கவிதைகள் – தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007, கைபேசி : 9842974697 – பக்கங்கள் : 64 – விலை : ரூ.50

 

—————————————————————————————–


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube