என் அறையின்1vikrlczkof1334
அருகில்
இருளிள் நின்றிருக்கும்
குதிரையை தினமும் பார்க்கிறேன்..

அந்த வெள்ளைக் குதிரை
இருளில் நிற்கும் போது
இருளை
ஒளிரச்செய்துவிடுகிறது….

அந்த குதிரைக்கு
இருளில் ஒளிரும் குதிரை
என பெயர் வைத்திருந்தேன்..

அந்த குதிரை
வெளிச்சத்தை
விரும்பவதில்லை
இருள்தான் அதன்
ஆதர்சம்..

பகலில்
வெள்ளைக்குதிரை
கண்களுக்கு
புலப்படுவதில்லை..

இருளில்
தன் வாலினை
முன்னும் பின்னும்
அசைத்தவாறு
ஒய்யாரமாய்
நின்றிருக்கிறது..

ஆகாசத்தை
பார்க்கிறது
தன் கழுத்தை
முன்னும் பின்னும்
அசைத்தவாரும்..
தன் கால்களை
பூமியில் உதைத்தவாரும்
சப்தமெலுப்புகிறது…

அந்த குதிரை
மற்ற குதிரைகளோடு
சேர்வதில்லை
தனிமையையே
நாடுகிறது…

தனிமையின்
வாசத்தை
சுவாசித்து
அகமகிழ்கிறது..

குதிரை வெறும்
குதிரை தானே..

இல்லை இல்லை

குதிரை வெறும்
குதிரை அல்ல..

குதிரை எப்போதும்
குதிரைதான்,..

ஒரு கணத்தில்
நானும் குதிரையாக
மாறிப்போனேன்
குதிரை வெறும்
குதிரையல்ல

குதிரை எப்போதும்
குதிரைதான்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube