தண்ணி, தம்மு அடிக்காத ஆளு இப்படி திடீர்னு செத்து போயிட்டாரே என நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய நபர்கள் பேசுவதை கேட்டிருப்போம். நமக்கே தெரியாமல் நாம் அன்றாட உண்ணும் உணவுகளின் வழியாகவே நாம் சாவை நெருங்குகிறோம் என்பதை தெளிவாக கூறியுள்ளது இந்த குறும்படம்.
எளிய மனிதர்களின் மரணத்தை குடும்ப உறவுகள் கூட ஒரு வாரத்திற்குள் மறந்து விடுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனாலோ என்னவோ தோழர் மதுரை மைந்தன் M.L.A என்ற கதாபாத்திரத்தின் வழியாய் நமக்கு புரியவைக்க முயன்றிருக்கிறார். M.L.A வின் மரண முடிச்சுகளை அவிழ்ப்பதிலிருந்து படம் துவங்குகிறது.
ஒரு மரணத்தை பல கோணங்களில் இருந்து பார்த்து ஆராயும்படியாக திரைக்கதை அமைத்திருப்பது தனிச்சிறப்பு. எடிட்டிங் அருமையாக செய்துள்ளார்கள். டீக்கடைக்காரர், டிடெக்ட்டீவ், டீக்கடைக்காரரின் பையன், ஆணி அடித்து காரை பஞ்சராக்கி கொல்ல முயற்சிக்கும் நபரின் வழியாகவும், மலர்விழியின் தந்தை வழியாகவும் இம்மரணம் நிகழ்ந்திருக்க கூடும் என ஆராய்கிறது திரைக்கதை. ஒரேக்காட்சி டிடெக்டிவ் வழியாகவும், குற்றம்சாட்டப்பட்டவர் வழியாகவும் அழகாக காண்பித்துள்ளார். படத்தின் இறுதியில் அவரது மரணத்தின் முக்கிய காரணமாக இருப்பது எது என்ற மரணமுடிச்சினை அவிழ்ப்பதில் முடிகிறது திரைப்படம். அனைவரும் கண்டிப்பாய் பாருங்கள். யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து , தங்களது எண்ணங்களை பகிருங்கள். இது படம் அல்ல பாடம் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். ஆப்புங்கப்பூ