வாழ்க்கையை பதிவு செய்யும் எந்த ஒரு கலையும் அற்புதமானதுதான். பதிவு செய்வது மட்டும் அல்லாமல், அந்த கலையின் வழியாய் சக மனிதர்களை யோசிக்க செய்யவும், வாழ்க்கையின் உன்னதத்தை புரிந்துகொள்ள வைக்கவும் இயலும் என்பதை தொடர்ந்து தனது செயல்பாடுகளால் நிறுபித்துவருபவர் மதுரை மைந்தன் அவர்கள்.49512315_10211373237441554_6478579246821277696_n

சமீபத்தில் வெளியான அவரது நிமிடமுள் குறும்படம் பார்த்தேன். இன்றைய அவசராகால உலகில் ஏழைமுதல், பணக்காரர்கள் வரை  இரு சக்கர வாகனம் ஓட்டுவதென்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.  வாகனங்கள் அதிகமாக புலகக்த்தில் வந்துவிட்டதால் , வாகன விபத்துகளும் நடைபெறுவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது.

தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு , நெகிழவைக்கும் திரைக்கதை அமைத்து வெளியிட்டுள்ளார் திரு மதுரை மைந்தன் அவர்கள்.

நகரத்தின் மிக முக்கியமான  நெரிசல்மிகுந்த  சிக்னல் பகுதியில் யாசகம் கேட்கிறாள் சிறுமி, சிலர் பணம் தருகின்றனர், சிலர் அவளை நிராகரிக்கின்றனர். அப்போது சாலையில் லோன் விசயமாக ஒருவர் கைப்பேசியில் பேசுகிறார். அதை பார்த்த சிறுமிக்கு அவளது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களோடு அன்போடு வாழும் அழகான குடும்பம், ஒரு நாள் அனைவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது உண்டாகும் விபத்தில்  அந்த சிறுமியைத்தவிர அனைவரும் இறந்து விடுகின்றனர். அக்காட்சியை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர்.

தலைகவசம் அணிந்துவரும் அப்பா, ஒரு கட்டத்தில் கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார். அப்போது தலைகவசத்தை முன்னால் அமர்ந்திருக்கும் மகளின் தலையில் அணிவிக்கிறார். அதன் வழியாய் அவள் மட்டும் உயிர் பிழைக்கிறாள்.

சிக்னலில் யாசகம் கேட்டு பெற்ற பணத்தில் தலைகவசம் வாங்கி , வாகன ஓட்டிகளுக்கு  கொடுக்கிறாள். அப்படி அவள் தலைகவசம் கொடுக்கும்போது அவளது கதையை கேட்கும் ஒருவர். அந்த சிறுமியின் மீது இரக்கம் கொண்டு அவளை தன் மகளாக ஏற்றுக்கொண்டு அழைத்துச்செல்கிறார். படம் நிறைவடைகிறது.

மதுரை மைந்தன் தன் வாழ்க்கை கஷ்ட்டங்களுக்கு மத்தியில் தரமான  குறும்படங்களை இயக்கியும், நடித்தும், நண்பர்களை நடிக்கவைத்தும் வருபவர். அவரது கலை ஆர்வத்தை ஊக்குவிப்பதும், ஆதரவு நல்குவதும் நம் தலையாய கடமையாகும்.

படம் பார்க்க : நிமிட முள்

 

One Response so far.

  1. மதுரை மைந்தன் says:

    Thank for you


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube