பால்யம்…

பனியில் நனைந்து
கொண்டிருக்கிறது
 ஊஞ்சல்..
சிறிதுவெளிச்சத்தில்
மிளிர்ந்து கொண்டிருக்கிறது
இராட்டினம்…
அவற்றில் ஏறி
அமர்ந்து விளையாட
மனதில் ஆசை ஊற்றுகள்
குமிழ்கின்றன..
என்றோ
ஊஞ்சலில்
விளையாடியபோது
தள்ளிவிட்ட
புவனாவை
எண்ணி மனதில்
சிறு கலக்கம்..
இராட்டினத்திலும்
ஊஞ்சலிலும்
அமர்ந்து இறகை
சிலுப்பிச் செல்லும் அந்த
பட்டாம்பூச்சியின் இறகோடு
சேர்ந்து பறக்க எண்ணி
எத்தனிக்கிறது மனது..

 

 

 

 

******”**********

நீண்டு வளர்ந்தschool

புளியமரத்தின்

கிளைகளில்

தொற்றிக்கொண்டிருக்கும்

தேன் கூட்டின்

சுவையிலுள்ளது

தொலைந்த பால்யம்…

*****************

பால்ய நண்பர்களை

பார்க்கும்பொழுதுதான்

வாழ்க்கை பக்கங்களில்

பசுமை எழுத்துகள்

மலர்கிறது..

******”**********

ஏனோ

மீண்டும் அந்த

மிளகாய் போட்ட

மாங்காவிற்கும்..

ஜவ்வு மிட்டாயுக்கும்

இழந்தைப் பழத்திற்கும்

மனது ஏங்குகிறது…

******”**********

 

One Response so far.

  1. Rakkappan says:

    Very nice lines..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube