விடுமுறைக்கு வந்து செல்லும்போது , பிரிவின் வலியை போக்குவதும் : வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்வதும் புத்தகங்களே ஆகும்.

இம்முறை விடுமுறையில் மதுரைப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகத்தில் தேவமலர் புத்தகத்தை வாங்கினேன்.IMG_20190926_115051

தேவமலர் குறுநாவலின் சிறப்புகளை ஏற்கனே அறிந்துள்ளதால் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் புத்தகம் வாங்கிய நாள் முதலே தொற்றிக்கொண்டது.

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் கோரமண்ட்டல் எக்ஸ்பிரஸில் ஜென்னலின் அருகே அமர்ந்து படிக்கத்துவங்கினேன்.

படிக்க படிக்க என் முன்னே கீயிங்கே வனம் பூப்பதை போன்ற காட்சியும், பூக்களின் நறுமணமும் வருவது போன்ற உணர்வு என்னுள் எழுந்தது

தலைமறைவாக காட்டில் தன்  மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறான் . காட்டின் வழியாய் செல்லும் பயணிகளிடம் அவர்களை மிரட்டி பண்டங்களையும், பொருட்களையும் பறித்து விடுவதுதான் அவனது பணி.

நீண்ட நாட்களகா பிரயாணிகள் யாரும் வராததால் திருடனின் மனைவி தனது ஐந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு வருகிறாள். அங்கே வீடுகளுக்குச் சென்று யாசகம் கேட்கிறாள் ..
திருடனுக்கு பயந்து அனைவரும் தங்களிடமுள்ள பொருட்களையும் , ரொட்டிகளையும் கொடுக்கின்றனர்.

அப்போது ஊவிட் அரண்மனையின் கதவுகள் திறந்துள்ளதை காண்கிறாள்.
அரண்மனைக்குள் சென்ற பொழுது அங்கே உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளையும் , மலர்களையும் பார்த்து வியக்கிறாள்.

ஊவிட் அரண்மனையில் பணிபுரியும் காவலாளி அவளைக்கண்டு விரட்டுகிறான்.
அவ்வேளையில் அங்குவரும் அப்பட் ஹான்ஸ் (முதிய மதகுரு) அவனை அமைப்திப்படுத்திப்விட்டு , திருடனின் மனைவியை தோட்டத்தைக்காண அனுமதிக்கிறார்.

இந்த மாதிரி அழகிய தோட்டத்தை நீ எங்கும் கண்டிருக்க இயலாது என திருடனின் மனைவியிடம் கேட்கிறார் அப்பட் ஹான்ஸ்.

இல்லை இதைவிட அழகிய தோட்டத்தைக் கண்டுள்ளதாக அவள் கூறுகிறாள்.

அப்படி இருந்தால் உன் குடும்பத்தை மண்ணித்து மீண்டும் நகரில் குடியிருக்க வழிசெய்கிறேன் என்கிறார்.
கிறிஸ்துமஸ்கிற்கு முந்திய இரவில் கியீங்கே வனம் பூப்பதை நான் கண்டுள்ளதாக கூறுகிறாள்.

அதே மாதிரி அந்த மதகுரு அங்கு செல்வதும் பூத்து மலரும் கீயிங்கே காட்டினை பார்த்து ரசித்து , திருடனின் மனைவி கூறியது உண்மைதான் என அறிவதும் நாவலின் முக்கியமான கட்டம்.

மலரைப்பறிக்க முயற்சிக்கும் அவர் இறந்துவிடுகிறார்.
அவர் கூடே வரும் காவலாளி அவர் கையில் பிடுங்கிய கிழங்கை அரண்மனையில் நடுகிறான் அதிலிருந்து தேவமலர் பூக்கிறது.

நாவலின் இறுதியில் தேவமலரை பார்த்து அதிசயித்து அப்பட் ஹான்ஸ் கூறியது போல ” திருடனின் குடும்பம்
நகருக்கு குடிவருகிறது”.

நாவலின் மிகக் குறுகிய பகுதியையே பதிவு செய்துள்ளேன்.

இந்தக் குறுநாவலை வாசிக்கும் ்பொழுது கிடைக்கும் அனுபவம் பேரானந்தமானது அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்
தேவமலர்.
இப்புத்தகத்தில் மேலும் சிறந்த குறுநாவல்கள் உள்ளன.

தேவமலர் நாவலை மொழிபெயர்த்தவர் கா.நா.சு.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube