Posted by DevarajVittalan on Sep - 8 - 2021

பாஸ்கல் (PASCAL) பள்ளிக்குச் செல்லும்போது கயிறுகட்டப்பட்ட ரெட்பலூன் ஒன்று கம்பத்தில் சிக்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறான். கம்பத்தில் ஏறி பலூனை எடுத்து தன்னோடு கொண்டு செல்கிறான். பேருந்தில் பலூனோடு ஏற முயற்சிக்கும் பாஸ்கலை நடத்துனர் பேருந்தில் ஏற மறுதலிக்கிறான். ஏமாற்றத்தோடு நின்றிருக்கும் பாஸ்கல், பின் வேகமாக பலூனைப் பற்றிக்கொண்டே நகரத்தினூடே ஓடியே பள்ளியை வந்தடைகிறான். பள்ளிக்குள் துப்பரவுப் பணி செய்துகொண்டிருக்கும் பெரியவரிடம் பலூனைக் கொடுத்து பலூனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் எனக் கூறிவிட்டு தன்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 26 - 2019

உறவுகளுக்குண்டான பாசம் என்பது சொல்லில் தெரியாதது. பிரிவுகளை சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கை மிகவும் கடினமனாது. சமீபத்தில் அபூனா என்ற திரைப்படம் பார்த்தேன். அமீன் கதவினை திறக்கிறான். வெளிச்சம் வீட்டிற்குள் வருகின்றது. தூங்கும் அண்ணன் தாஹீரை செல்லமாக சீண்டுகிறான் ; தூக்கம் களைந்து எழும் தாஹீர் தம்பியை விரட்டுகிறான். சிற்றுண்டியை கழிக்கும் போது, அப்பா அவர் அறையில் இல்லை ஏன் போய்விட்டார் என அண்ணன் தாஹீரை பார்த்து கேட்கிறான். அம்மா
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 13 - 2019

வாழ்க்கை எத்தனையோ முரண்பாடுகளால் நிறைந்திருக்கிறது. அன்பு, ஆசை, கோபம், காமம் என்ற உணர்வுகளால் அலைக்களிக்கப்பட்டு வாழ்கிறோம். இறுதியில் வாழ்க்கைப் பயணம் சென்றடைவது மரணம் என்ற பெரும் வாயிலுக்குத்தான். மதர் அண்ட் சன் திரைப்படத்தில் மரணத்தின் அருகில் இருக்கும் அன்னைக்கும் , இளம் வயது மகனுக்குமான உன்னதமான கடைசி நிகழ்வை படம் பிடித்து காண்பித்துள்ளார்கள். மகனும், நோய்வாய்ப்பட்ட அன்னையும் வனம்சார்ந்த குளிர்பிரதேச வீட்டில் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு அறையில் உள்ளார்கள். அன்னை
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 19 - 2018

யூட்டியூப்பில் பழைய ஹிந்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போதுதான் சல்லீல் சௌத்ரியின் இசையில் “அப்னி கானி சோடுஜாவ், குச்து நிசானி சோடுஜாவ்” என்ற அற்புதமான வரிகள் கொண்ட வலிமிகுந்த பாடலை கேட்டேன் . படம் தோ பிகா ஜமீன். வெளியான ஆண்டு 1953 இயக்குனர் ; பிமல் ராய் திரைப்படத்தில் மீனா குமாரி , ரத்தன் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள் இப்பொழுதுள்ள அதிகாரவர்கமிக்க அடாவடித்தனமான தமிழக அரசியல் சூழலில் இத்திரைப்படத்தை
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jun - 11 - 2018

காலம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது; ஆனால் காலத்தில் சந்தித்த , பழகிய மனிதர்களின் நினைவுகள் மட்டும் மனதில் பசுமையாக நின்றுவிடுகிறது. சமீபத்தில் THE WAY OF HOMEஎன்ற கொரிய மொழி திரைப்படம் பார்த்தேன். ஏழுவயது சிறுவனுக்கும் , அவனது பாட்டிக்கும் இடையிலான அன்புதான் கதை. இந்த படத்தை பார்க்கும்பொழுது கண்டிப்பாய் நமது முன்னோர்களின் நினைவுகளும், பால்யகால காட்சிகளும் மன ஆழத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிடுகிறது. சேங்-ஊ என்ற சிறுவனை அவனது அம்மா நகரத்திலிருந்து
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 24 - 2018

பூட்டான் அழகான அமைதியான சிறிய நாடு என மட்டும்தான் பூட்டான் வரும்வரை கேள்விப்பட்டிருந்தேன். பணி நிமித்தமாக பூட்டான் வந்த நாள் முதல் பூட்டானின் இயற்கை அழகில் மனம் தொலைந்துவிட்டிருக்கிறது. பெரிய மலைகளின் பள்ளத்தாக்குகளில் சின்ன சின்ன கிராமங்களாக பூட்டான் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். என் அலுவலகத்தின் அருகில் ஹாச்சூ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. நதியின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மரத்திலாளான சிறிய வழித்தடங்களில் நின்று நதியை பார்க்கும்பொழுது; நதி மனதையும்
[ Read More ]Continue