Posted by DevarajVittalan on Jan - 9 - 2019

பனியில் நனைந்து கொண்டிருக்கிறது ஊஞ்சல்.. சிறிதுவெளிச்சத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது இராட்டினம்… அவற்றில் ஏறி அமர்ந்து விளையாட மனதில் ஆசை ஊற்றுகள் குமிழ்கின்றன.. என்றோ ஊஞ்சலில் விளையாடியபோது தள்ளிவிட்ட புவனாவை எண்ணி மனதில் சிறு கலக்கம்.. இராட்டினத்திலும் ஊஞ்சலிலும் அமர்ந்து இறகை சிலுப்பிச் செல்லும் அந்த பட்டாம்பூச்சியின் இறகோடு சேர்ந்து பறக்க எண்ணி எத்தனிக்கிறது மனது.. ******”********** நீண்டு வளர்ந்த புளியமரத்தின் கிளைகளில் தொற்றிக்கொண்டிருக்கும் தேன்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 1 - 2019

இருண்ட வானத்தில் ஒளிர்கிறது பல வண்ணங்களில் வெளிச்சம்.. வெளிச்சத்தின் நிழல் தன் மீதும் படுமென்ற ஆசையில் நதிக்கரையில் நடக்கிறான் சிறுவன்..
Continue
Posted by DevarajVittalan on Dec - 25 - 2018

ஜன்னலின் வழியாய் தெரிகின்றது ஒரு கிராமத்தின் ஜொலிக்கும் திருவிழா இரவு..
Continue
Posted by DevarajVittalan on Aug - 25 - 2018

ஞாயிற்றுக் கிழமையின்மேல் அலாதியான ப்ரியம் உண்டு… அன்றுதான் பரபரப்பு குறைந்த அப்பாவைக் காணமுடியும்.. அப்பாவின் முரடான கரங்கள் அன்று மென்மையாகி கேசத்தை கோதிவிடும்… எப்போதும் அனகோண்டாவாக தெரிந்த அப்பா அன்று அருளானந்தராக மாறிவிடுவார்… அனுதினமும் அதிகாலையிலே அவசரமாக துயில்களையும் அம்மா அன்றுதான் ஆசுவாசமாக எழுவார்… அழகான அன்பு பொழியும் முகத்தோடு அன்று அவர் செய்யும் சிற்றுண்டி கூட சுவை கூடியிருக்கும்…
Continue
Posted by DevarajVittalan on Jun - 11 - 2018

தொலைதூரத்தில் இருந்தாலும் இரயில் தண்டவாளத்தில் காதுவைத்து கேட்கும்பொழுது கேட்கிறது நம் கிராமத்து தாயின் தாலாட்டுப்
Continue
Posted by DevarajVittalan on Jun - 10 - 2018

என் அறையின் அருகில் இருளிள் நின்றிருக்கும் குதிரையை தினமும் பார்க்கிறேன்.. அந்த வெள்ளைக் குதிரை இருளில் நிற்கும் போது இருளை ஒளிரச்செய்துவிடுகிறது…. அந்த குதிரைக்கு இருளில் ஒளிரும் குதிரை என பெயர் வைத்திருந்தேன்..
Continue
Posted by DevarajVittalan on May - 28 - 2018

முன்பொருநாள் வீட்டில் திண்ணையிருந்து.. திண்ணையில் பாய்விரித்து துயில் எழும்போது அரசமரங்களில் பூபாளத்தை வரவேற்கும் பச்சைகிளிகளின் சப்தத்தை கேட்கமுடிந்தது.. “காலங்காத்தால எந்திருச்சு படிங்கடா” என தன் மூங்கில் கைத்தடியோடு அன்போடு அடிக்கும் தாத்தாவின் அன்பிருந்தது.. பங்காளிச்சண்டை போடாத உடன்பிறப்புகளின் பாசமிருந்தது.. சாதிகள் வேறுபாடின்றி வாழ்ந்த கிராமவாசிகளின் கரிசனமிருந்தது..
Continue
Posted by DevarajVittalan on May - 18 - 2018

மகள்களின் பிஞ்சுக்கரங்களின் பற்றலில் உணர்வது தாயின் ஸ்பரிசத்தை.. ********* ஆலயமணியின் சப்தம் கேட்டு விழிதிறக்கும் கடவுள் போல் அப்பாவின் குரல் சப்தம்கேட்டு அன்புவிழி மலர்ந்து புன்னகைப்பவள் மகள்கள்.. *********** மீசைக்குத்த அப்பா கொடுக்கும் முத்தங்கள்வாங்கி புன்னகைக்கும் மகளின் முகம் பௌர்ணமி நிலவு.. *********** மகன்களை பெற்றவர்களுக்குத்தான் தெரிகிறது மகள்களின் அருமை.. **********
Continue
Posted by DevarajVittalan on Apr - 23 - 2018

தன்னையேதோளுரித்து காட்டும் சாட்டையடிப்பவனின் முகம்.. உடைந்தபிளாஸ்டிக் டப்பாவைஏந்தி யாசகம் கேட்கும்சிறுமியின்முகம்.. நெரிசல்மிகுந்தசாலையின் ஓரத்தில்தன் கம்பீரம்தொலைத்து பாகனை சுமந்து செல்லும் களிறுவின்முகம்…
Continue
Posted by DevarajVittalan on Feb - 24 - 2018

மனித சமூகத்தின் பழைய வாழ்க்கையின் அடையாளமான நீ ஏன் காட்டிலிருந்து இந்த நாற்றமெடுத்த மனித சமூகத்திற்கு வந்தாய்? நீ எடுத்த பொருட்களுக்கு திருட்டு என பட்டம்கட்டி உயிரைக்கொன்ற இந்த நாகரீக வேடமணிந்து வாழும் வேடதாரிகள்.. எளிய மனிதர்களை சுரண்டி உயிர்வளர்க்கும் பிணம்திண்ணும் கழுகுகளை என்ன செய்வது..
Continue