Posted by DevarajVittalan on Dec - 31 - 2022

. தொலைதூரத்தில் பாலை மணல்வெளியில் ”ஆர்மட் ரெஜிமெண்டினர் செய்துவரும் போர் பயிற்சியினால் எங்கள் கம்யூனிகேசன் இராணுவ முகாம் வரை இடைவிடாத ”டம் டம்மென” குண்டு சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இராணுவ பேரக்கின் முன்பு இருக்கும் அரசமரமும், வேப்பமரமும் மழைவேண்டி தியானித்திருப்பது போல் சலனமற்று நின்றிருந்தது. வெண்மையான துகள் துகளான மணலின் ,மேல் கட்டெறும்புகள் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. கருமேகங்கள் வானில் வேகமாக நகர்ந்து வந்தது. குளிர்காற்று வீசத்துவங்கியது மழையோடு சம்பாசனை செய்வதுபோல்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 6 - 2021

சிட்டுக்குருவியொன்று வெய்யில் தகிக்கும் இராஜஸ்தானின் நண்பகல் வேளையிலும் தன் கூட்டிற்காக , சிறு சிறு குச்சிகளை சேகரித்துக் கொண்டு கருவேலமரங்களினூடே இங்கும் அங்குமாய் உற்சாகமாய் பறந்துக்கொண்டிருந்தது. சாலை நெடுகிலும் நிறைந்திருக்கும் கருவேலமரங்களின் நிழல்கள் அழகிய ஓவியங்களாய் சாலையின் மீது படிந்திருப்பது கேசவனின் கண்களுக்கு அழகாய்த் தெரிந்தது. தூரத்தில் இராணுவ வீரர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் மஞ்சள் வர்ண அழகிய குடியிருப்பு வீடுகளை கேசவன் ஏக்கத்துடன் பார்த்தான். இந்தக் கொரோனா நோய்த் தொற்று
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on May - 4 - 2019

“ஓரமா போயி படுங்க”… “வார்டு வரண்டாவுல இப்படியா படுக்க கண்டோம்; ஆஸ்பத்திரில ஒரு சீக்காளிய அட்மிட் பண்ணிட்டு; குடும்பத்தோட அஞ்சாறு ஆளுக வந்து கெடக்குறது; நடந்து போறதுக்கு கூட பாதை இல்ல”… என ஸ்ட்ரெக்சரை தள்ளிக்கொண்டு ஒரு குண்டான நடுத்தரவயது பெண் எரிச்சல்பட்டு சப்தமிடுவதைக்கேட்டு ஆஸ்பத்திரி வரண்டாவில் படுத்துக்கொண்டிருந்த முனியாண்டி தூக்கம் களைந்துபோய் கண்விழித்தபோது ,நேரம் அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது. ”நேத்து டூயிட்டில இருந்த பொம்பளயெல்லாம் இப்படி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 6 - 2018

ஹாச்சூ நதி சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் புளுபப்பி மலர்கள் அழகாய் பூத்திருக்கின்றன. புளுபப்பி மலர்களின் வண்ணங்களால் நதிக்கரை மேலும் அழகாக தெரிகிறது. எங்கள் இராணுவ முகாம் நதிக்கரையின் அருகில் உள்ள மேட்டில்தான் அமைந்திருக்கிறது. அறையிலிருந்து பார்த்தால் ஹாச்சூ நதியில் மீன்பிடிப்பவர்கள், புளுபப்பி மலர்களை பரித்துச்செல்பவர்களென நதிக்கரையில் மனிதர்கள் நடமாடுவது தெரியும். அந்த அழகிய நதியை கடக்க இராணுவத்தினர் இரும்பிலான பாலம் அமைத்திருந்தனர். பாலத்தில் பூட்டான் வாசிகள் பலவண்ணங்களைக் கொண்ட
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 6 - 2018

இரயில் “பபினா” ஸ்டேசனை வந்தடைந்த பொழுது ஆகாசமெங்கும் மஞ்சள் பூத்திருந்தது; ஜன்னலின் வெளியே “வெக்கை மிதந்துகொண்டிருந்தது”; இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பூங்காவில் மஞ்சள் அரளிப்பூக்கள் அழகாய் மலர்ந்திருந்தது: வெக்கை ஏறியிருக்கும் மரப்பலகையில் படிந்திருக்கும் தூசியை பிஞ்சுக்கரங்களால் துடைத்துவிட்டு ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள் சிறுமி. வெள்ளை நிறத்தில் ரோஜா பூ எம்ராய்டிங் பொதிந்த ஆடை அணிந்திருந்தாள். இரயில் மெல்ல நகரத்துவங்கியது. என் கண்கள்; பூங்காவையும் குழந்தையையும் “கண்களைவிட்டு மறையும் வரை” பார்த்துக்கொண்டேயிருந்தது. இராணுவத்தில்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 24 - 2017

உயிர் எழுத்து அக்டோபர் மாத இதழில் காஷ்மீரியன் சிறுகதை வெளிவந்தது ; எனது தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியிட இயலவில்லை அந்த சிறுகதை எனது காஷ்மீர் அனுபவங்களை வைத்து எழுதினேன் .
Continue
Posted by DevarajVittalan on Nov - 20 - 2017

வான்கா என்ற சிறுவனின் ஏக்கம் நிறைந்த கடிதம் நூறாண்டுகள் கழித்தும் மனதை நெகிழச்செய்கிறது … பனிபடர்ந்து கொண்டிருக்கும் இவ்விரவை அந்தோன் சேகவ் கருணையினால் நிரப்பிச்செல்கிறார். அந்தோன் சேகவ் மனம் நிறைய நிறைந்துள்ளார்… படித்துப்பாருங்கள்..
Continue
Posted by DevarajVittalan on Jun - 11 - 2017

வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக் கூடுதல்தான். சும்மா அமர்ந்திருந்தாலும் உடம்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போன்ற ஒரு பிசுபிசுப்பு வந்துகொண்டேயிருக்கும், வற்றாத ஆறுபோல. யுவராஜ் ஜான்ஸி வந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. பள்ளிக்கூடத்தில் ஜான்ஸிராணி லச்சுமிபாய் பற்றிப் படிக்கும்பொழுது மனதில் பெரும்மனக்கிளர்ச்சி உருவாகி வந்தது உண்மைதான், ஆனால் இப்போது இங்கு அடித்துக் கொண்டிருக்கும் வெய்யில், அந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 15 - 2015

அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள் எல்லாப் பேருந்துகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் புகைத்துக் கொண்டிருந்தனர். புகை வானில் திட்டு திட்டாய் உருவங்களை உண்டாக்கியவாறு பறந்து சென்றுகொண்டிருந்தது. மணி சரியாய் இரவு பத்து ஆகியிருந்தது , இப்போது வண்டி ஏறினால் உத்தேசமாய் காலை மூன்று மணிக்குள் மதுரையில் இருக்கும் வீட்டிற்கு
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 23 - 2014

நீண்டு வளர்ந்திருக்கும் தேவ்தர், யாரிகுல், சினார் மரங்களையும், சினார் மரத்தின் அழகிய இலைகளையும், வளைந்து வளைந்து செல்லும் அழகிய நதிகளையும், மலைகளில் படிந்திருக்கும் பனிகளையும், வானில் சுதந்திரமாக எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளின்றி பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும், பறவைகள் எழுப்பும் இனிய சப்தங்களையும், வண்ண வண்ண மலர்களையும் பார்த்து, மகிழ்ந்து இயற்கையின் அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹேமந்த். காஷ்மீரில் இருக்கும் அழகிய பனி படர்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் போதெல்லாம் ஹேமந்தின்
[ Read More ]Continue