Posted by DevarajVittalan on Feb - 26 - 2012

ஜனத்திரள் நிறைந்திருந்தது , தன் உடல் முழுவதும் கடிகாரத்தை சுற்றிக்கொண்டு (“குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா” “குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா”) எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாயென சப்தம் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயதுக்காரன். புழுதி படர்ந்த மேனியுடன் பல குழந்தைகள் நடைபாதையில் நின்று கொண்டிருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். நிராகரிப்பின் ஊடே கிடைக்கும் சில சில்லரைகளை வேகமாக ஒரு ரோபோ போல் சென்று, படியின் ஓரத்தில்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 30 - 2012

வெயில் ஏறிய பின்பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினான் முத்து. அவனது நிழலும் அவனைப்பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களில் பதநீர்க் கடைகளும், தர்பூசணிக் கடைகளும் நிறைந்திருந்தன. வழக்கம் போல் வாகனங்கள் அதீதமான ஒலியை எழுப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு இதே சாலையில்தானே குழப்பமான மன நிலையோடு அலைந்து திரிந்தோம். இப்போது மனதில் தெளிவு பிறந்திருந்தாலும் அப்போது வலியையும், சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 14 - 2012

மதுரையில் உள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக – 1970 ஆம் ஆண்டு முதல் 36 வருடங்கள் பணியாற்றிய வரும், சிறுகதைப் படைப்பு, பெண்ணிய ஆய்வு என்ற இரு தளங்களிலும் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் நேர்காணல் மூன்றாம் கோணம் பொங்கல் மலரில் வெளியாகி உள்ளது… இணைய வாசகர்கள் அனைவரும் வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு. எம்.ஏ.சுசீலா அவர்களின் பேட்டி
Continue
Posted by DevarajVittalan on Jan - 9 - 2012
டொங்.. டொங் என பள்ளிக்கூட சாப்பாட்டு இடைவேளையின் மணியோசை காதில் விழ தன் குடிசையின் மூலையில் இருக்கும் அலுமினிய தட்டை தூக்கி கொண்டு ஓட்டமாய் ஓடினாள் முத்துலட்சுமி. அவளது கால்கள் சக்கராமாய் சுழன்றது அவ்வளவு வேகம், வயதுக்கு மீறிய வேகம், எல்லாமே பசி என்ற அரக்கன் படுத்தும் பாடு. வழியெங்கும் வெயில் நிறைந்திருந்தது, வீட்டில் காய்ச்சலோடு படுத்து கொண்டிருக்கும் தம்பியின் நினைவுகள் மனதில் எழுந்து வந்தது. முதல் ஆளாக ஓடி வந்து வரிசயில் நின்றாள். எங்கே தன்னை சரஸ்வதி டீச்சர் பார்த்துவிடுவார்களோ என பயந்து கொண்டே நின்றிருந்தாள், போன முறையே
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 7 - 2012

“பறவைகளின் சப்தத்தில் தன் நித்திரை கலைந்த நவீன், மெதுவாக தன் மேல் படர்ந்திருந்த போர்வையை விலக்கினான். தன் வீட்டு மாடி வரை வந்து தன் கரத்தை நீட்டிக் கொண்டு இருக்கும் வேம்புவில் இருந்து ஜனிக்கும் பறவைகளின் ஒலியை மௌனமாக அவதானித்தான். பின் கண்களை மூடி அவனாக சிரித்தான், தன் டவுசர் பைக்குள் கை விட்டு, ஒரு கைக்குள் அடங்கும் புகைப்படத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான். அப்போது தனக்குத் தானே
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 3 - 2012
சிறுகதை அந்த வீட்டில் இருந்து புகை வந்த வண்ணமிருந்தது வீட்டின் நாலு மூளையிலும் குங்குமத்தை தேய்த்த எலுமிச்சம் பழங்கள் வெட்டி வீசப்பட்டிருந்தது. சவுக்காள் அடிக்கும் சப்தம் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து வந்துகொண்டேயிருந்தது. வேப்பமரங்கள் நிறைந்த அந்த தெருவில் வேம்புவின் வாசம் நிறைந்திருந்தது. வேப்பம் பழங்கள் வீதியெங்கும் சிதறிக்கிடந்திருந்தன. அந்த கரிசல் பூமியில் வேப்பம் பழங்களின் விதைகளை சேகரித்து விலைக்கு போடுவதை தெருவாசிகளில் பலர் வழக்கமான தொழிலாய் கொண்டு வாழ்ந்து வந்தனர். அப்படி வேப்பம்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 29 - 2011

மேகங்கள் அலைந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே ஆலமரத்தின் அடியில் உள்ள நீள் சதுர வடிவ கருங்கல்லில் அமர்ந்து கொண்டிருந்தான் கணேசன். அவன் மனம் முழுவதும் நாளை வெளி வர இருக்கும் தன் ஆத்மார்த்தமான நாயகனின் படத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது. தூரத்தில் பள்ளிக் கூட மணியோசைக் கேட்டதும், சந்தோசச் சாரல் அவன் முகத்தில் வீசியது. ‘அப்பாடா.. இன்னைக்கு பள்ளிக்கூடம் சீக்கிரமாகவே விட்டுட்டாங்களே..’ என தன் மனதுக்குள்ளாகவே எண்ணிக் கொண்டு
[ Read More ]Continue