Posted by DevarajVittalan on Jun - 4 - 2018

சில தினங்களுக்கு முன்புதான் மாராத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டேன். மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்குபெற்று ஓடியது மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. ஓட்டம் நாம் கருவில் உருவாகும் தருணத்திலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது என்ற உண்மையை இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் சிக்கி அநேகமானவர்கள் மறந்துவிடுகிறோம். இயங்குதல் என்ற பேருண்மைதான் தனிமனித வாழ்க்கை முதல், சமூகம் வரை மாற்றத்தை கொண்டுவருகிறது. பூட்டானிலுள்ள பாரோ நகரில் இந்திய பூட்டானின் 50 ஆண்டுகால நிறைவை ஒட்டி மாராத்தான்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on May - 13 - 2018

பூட்டானுக்கு பணி நிமித்தமாக வந்த நாள் முதல் பூட்டான் நாட்டின் இயற்கை அழகையும், அமைதியான மக்களையும் கண்டு பழகியபின் அவர்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் பூட்டான் பற்றிய தகவல்களை தேடினேன். எனது அலுவலக நூலகத்திலிருந்து Journey Across Singye Dzong : A True Life Story… என்னும் Tandin wangchukஎழுதிய புத்தகத்தை படித்தேன். Singye Dzong என்ற கிழக்கு பூட்டானில் இருக்கும் மடாலயத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Apr - 28 - 2018

இன்று மிகவும் உற்சாகமாக பயணம் தொடங்கியது; அலுவலகப்பயணம்தான் எனினும் உற்சாகம்தான், அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே உங்களுக்கும் உற்சாக டானிக் குடித்ததுபோன்ற உணர்வு வந்துவிடும், அந்த ஊரின் பெயர் திம்பு. Jigme Khesar Namgyel Wangchuck ராஜாவாகவும், Jetsun Pema ராணியாகவும், ஆட்சி செய்யும் பூட்டான் நாட்டில் உள்ள ஊர்தான் திம்பு. என் நண்பனின் அறையில் ஜெட்சன் பெமாவின் அழகிய புகைப்படம் இருக்கும். அவன் விழித்ததும் ஜெட்சன் பெமாவின் புகைப்படத்தை
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Apr - 22 - 2018

தாத்தாக்களின் உலகம்.. பணிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் கல்கத்தா இரயில் நிலையத்தில் குவ்காத்தி செல்லும் காம்ரூப் எக்ஸ்பிரஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவனை ,வயதான நபர் கரங்களை பிடித்து நிதானமாக இரயிலை பிடிக்க அழைத்துச்சென்றார். அந்த காட்சி என் மனதில் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டது. அப்பா, அம்மாவின் அன்பைக்காட்டிலும் தாத்தா, பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது என எண்ணுகிறேன். தாத்தாவின் கரங்களின் வழியே நீண்ட இந்த வாழ்க்கையின் அனுபவங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Apr - 17 - 2018

பயணங்கள் எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தேடுதல்களையும் தந்துகொண்டேதான் உள்ளன, ஒவ்வொரு மனித முகங்களுக்குள்ளும் பல்வேறு கதைகளைப்பார்க்க முடிகிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் பூட்டானிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்பொழுது உற்சாகமான மனநிலையில் அலுவலகத்தை விட்டு பயணித்தேன். பூட்டானிலுள்ள ஹா என்ற இடத்திலிருந்து அலுவலக வண்டியில் மேற்குவங்க மாநிலத்தின் பார்டர் பகுதி வரை கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். பின் அங்கிருந்து நியூ அலிப்புர்துவார் என்ற இரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை செல்லும் இரயிலை
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 2 - 2017

முன் பின் பழக்கம் இல்லாத பயண வழி உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு காய் கழுவப் போனேன் சாதாரண உயரத்தில் இரண்டு வாஷ்பேசின்களும் மிக குறைந்த உயரத்தில் ஒரு வாஷ்பேசினும் இருந்தன. கை கழுவும்போது காரணம் தெரிந்து விடடது. குள்ள வாஷ்பேசின் முன் இல்லாத குழந்தையின் மேல் செல்லமாக தண்ணீர் தெளித்து விளையாடிவிட்டு விரைவாக வெளியே வந்துவிட்டேன் . – முகுந்த் நாகராஜன்.
Continue
Posted by DevarajVittalan on Mar - 10 - 2012

தில்லிகை என்ற இலக்கியவட்டம், தில்லியில் தன் செயல்பாட்டை இன்று மாலை தில்லித் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் வாயிலாக துவங்கியுள்ளது. திருமதி எம்.ஏ. சுசீலா அம்மாவின் வாயிலாக தில்லிகை இலக்கியவட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன். முதல் கலந்துரையாடலே நான் நேசித்து சுற்றிதிரிந்த எங்கள் ஊரான மதுரையை பற்றி என்பதால் மதியம் ஒரு மணிக்கே கிளம்பி தமிழ் சங்கம் வந்து விட்டேன். நீங்கள் இதை அளவுக்கதிகமான ஊர்பாசம் என்றே எடுத்துக்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Mar - 4 - 2012

புத்தகங்கள் எப்போதும் மனதிற்கு நிறைவளித்துக் கொண்டிருக்கின்றது. நல்ல நட்பு கூட சில தவறான புரிதல்களால் கசந்து விடும் இக்கால கட்டத்தில் என்றுமே புத்தகங்கள் நல்ல நண்பனாய், ஆசானாய் உள்ளது. உலக புத்தக கண்காட்சி நிறைவு நாளான இன்று புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒரு புத்தகமாவது வாசித்து விட வேண்டும் என்பது என் ஆசை. சுதந்திரமாய் எழுத வேண்டும் எழுதி கிடைக்கும் வருவாயில் வாழ வேண்டும் என்ற
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 28 - 2012

ஞாயிற்று கிழமை மாலைப் பொழுதில் தில்லி, தமிழ்ச் சங்கத்தில் எஸ்.ரா வின் உரையை கேட்க முடிந்தது. அதற்கு முன் திருமதி எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் என்னை எஸ்.ராவிற்கு அறிமுக படுத்திவைத்தார். எஸ்.ராவுடன் கை குலுக்கியபோது, மனதில் மகிழ்ச்சி நிறைந்தது.ஏற்கனவே அவரை பல முறை கண்டு பேசியுள்ளேன். மதுரை புத்தக திருவிழாவில், எஸ்.ரா வை முதன் முதலில் சந்தித்து எனது கைக்குட்டை கனவுகள் என்ற நூலை கொடுத்தது. மீண்டும் அவரது நூல்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 20 - 2012

கட்டுரை ஆசிரியர் திரு.பா. கிருஸ்ணன் (தினமணி) தில்லியை விட்டுப் போக மறுத்தேன்.. என் வேர் என்னவோ தமிழகம்தான், சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பத்தில் 1931ம் ஆண்டு மே 20ம் தேதி பிறந்தேன். பெரியப்பா சோமசுந்தர ஐயர் வேலூர் நகர சபையின் சேர்மனாக இருந்தார். பள்ளி முடித்த பிறகு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில், இண்டர்மீடியட் படிப்பைப் பூர்த்தி செய்தேன். அங்கு தமிழ்ப் பற்றுக்கு வித்திட்டவர் யோகசுந்தரம் என்ற ஆசிரியர். தில்லி
[ Read More ]Continue