Posted by DevarajVittalan on Feb - 19 - 2012

வடக்கு வாசல் அலுவலகத்திற்கு செல்லும் வேளைகளில் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களை சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களையும், அவரின் இறுதிக்காரியத்தில் கலந்து கொண்டவன் என்ற முறையில் என் எண்ணங்களை இந்த பதிவில் பதிவு செய்துள்ளேன். மூத்த தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி –இயற்கை எய்தினார்… 17 பிப்ரவரி 12 அன்று வடக்கு வாசல் அலுவலகத்திற்கு சென்ற பொழுது, மறைந்த ஏ.ஆர். ராஜாமணி அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வந்திருந்தார். வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேஸ்வரன் அவர்கள், வடக்கு வாசல் அலுவலர்கள் அனைவரும் அடுத்த இதழுக்கான
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 17 - 2012

அதிகாலையிலேயே எழுந்து ஹரிதுவாருக்கு சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறங்களிலும் நிறைந்திருந்த பசுமையான மரங்கள் மனதிற்கு சந்தோசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இருபத்தி ஐந்து ரூபாய் கட்டணம் வசூலித்தார் ஆட்டோக்காரர். சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே கங்கை வளைந்து, வளைந்து பூமியில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி மனதிற்கு சந்தோசமாய் இருந்தது. வாடைக் காற்று நெஞ்சை தொட்டுச் சென்று கொண்டிருந்தது. ஹரிக்கிபௌடியின் அருகில் ஆட்டோ நின்றது. கங்கையை நோக்கி சென்றேன். ரிஷிகேசில் பாயும் கங்கையைவிட,
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 15 - 2012

மாலை சூரியன் சாய்ந்து கொண்டிருந்தது, கங்கை அன்னை மிதமான சப்தத்துடன் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தாள், கங்கை அன்னையை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் ஒரு அமைதி உண்டானது. கால்களை கங்கையில் நனையும்படி வைத்து விட்டு கரையோர படிகளில் அமர்ந்து கொண்டேன். அந்தக் காட்சி அற்புதமானது, மாலை வேளையில் கங்கை கரையோரம் நடக்கும் தீபாராதனை பிரசித்தி பெற்றது, பஜனை பாடல்களும், இசை சப்தங்களும் மனதை நெகிழ வைத்தது. வெளி நாட்டிலிருந்து வந்து பலர்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 14 - 2012

நேற்று டெல்லியில் இருந்து இரயிலில் கிளம்பி ஹரிதுவாரில் இறங்கி, அதிகாலை ரிஷிகேசில் உள்ள கோவிலூர் மடம் வந்து சேர்ந்தேன். அறையில் சிறிது ஓய்வெடுத்து விட்டு, கங்கை அன்னையை வணங்க ஆயத்தமானேன். ரிஷிகேசில் உள்ள ஒரு தேநீர் கடையில், இரண்டு மட்டி (தட்டை), ஒரு கோப்பை தேநீரோடு காலை உணவை முடித்துவிட்டு. அவரிடம் ராம் ஜூலா, லக்ஷ்மண் ஜூலாவிற்கு எப்படி போவது என கேட்டு அறிந்து கொண்டேன். அவர் வெகு இயல்பான மனிதராக இருந்தார்.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 13 - 2012

இன்று (13 பிப்ரவரி 2012) அதிகாலை எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி அவர்கள் மரணமடைந்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அன்னாரின் உயிர் பிரிந்தது. வடக்கு வாசல் அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். ஆனால் காலை எட்டுமணிக்கு எனக்கு வந்த தொலைபேசி என் திட்டத்தை மாற்றியமைத்தது. திரு. செந்தில் அவர்கள் செய்த தொலைபேசியது, “சார், ராஜாமணி சார் இறந்துட்டார், R.B. Seth Jessa Ram Hospital, க்கு வரமுடியுமா என்றார்.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 5 - 2012

குளிர் குறைந்துவிட்டது, அறையெங்கும் புத்தகங்கள் நிறைந்துள்ளன. எதையாவது வாசித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போட்டியும், பொறாமையும் நிறைந்துள்ளது, அண்டை வீட்டில் தொடங்கி, உலகம் முழுவதும், இலக்கியத்திலும் கூட போட்டியும், பொறாமையும் நிறைந்திருப்பதைக் காணும் பொழுது மனதில் எரிச்சல் மேலெழுகிறது, சோர்வு வருகிறது.
Continue
Posted by DevarajVittalan on Jan - 28 - 2012

நேற்று மாலை நடைபயணத்தில் இருந்த பொழுது ஒரு நபர் என்னை சந்தித்தார்,.. சார் எப்படியிருக்கீங்க ? நல்லா இருக்கேன்.. நீங்க.. நல்லா இருக்கேன், பாத்து ரொம்ப நாளாச்சு, ஆமாம் சார்
Continue
Posted by DevarajVittalan on Jan - 23 - 2012

எப்போதும் சிகை அலங்காரம் செய்வது எரிச்சல் ஊட்டும் விசயமாகவே உள்ளது. பால்யத்திலிருந்தே நிறைய முடியோடு அலைவது பிடித்தவிசயமாக இருந்து வந்தது. ஆனால் பணி புரியும் அலுவலகம் முடிக்கு நிரந்தர எதிரி. அளவாகத்தான் முடி வைத்திருக்க வேண்டும். அதுவும் ஒழுங்காக முடியை வாரியிருக்க வேண்டும். என்ன செய்வது “எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இன்றைய மாலைப் பொழுதில் மரங்கள் இருபுறமும் அடர்ந்து நிறைந்திருந்த சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 21 - 2012

இன்று, நண்பனுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, பிடிப்பது, பிடிக்காதது பற்றி பேச்சு வந்தது, அவன் வட இந்திய ரொட்டியிலிருந்து, நம்ம ஊர் சாம்பாரை தொட்டு, கணினி மென்பொருளுக்கு வந்து, திரைப்பட நடிகர்கள் வரை தனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி கூறிக் கொண்டிருந்தான். எனது முறை வந்த பொழுது நான் எனக்கு பிடிக்காததை பற்றி கூற விரும்பவில்லை, ஏனெனில் நாம் பிடிக்காதது என கூறும் ஒன்று ஒரு சிலருக்கு நிறைய பிடித்திருக்கும். அவர்களுக்குள்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 9 - 2012
வாழ்க்கையே ஒரு கேலிசித்திரம் தானா? கடவுள் வரைந்த சித்திரங்கள் தான் நாமா? இயற்கை முதல் மனித உருவங்கள் வரை எத்தனை விதமான சித்திரங்கள் எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் என எத்தனையோ கேள்விகள் மனதில் எழுந்து மறைகிறது. திரு. கல்யாண்ஜி அவர்களின் முழுத்தொகுப்பை ஒரு சேர வாசிப்பது இம்முறைதான் விகடனில் அவரது கவிதைகளை வாசித்துள்ளேன். அகம் புறம் தொடரை ரசித்து ரசித்து வாசித்த அனுபவம் நினைவில் வந்து செல்கிறது. கதையை புரிந்துகொள்ளும்
[ Read More ]Continue