அம்மாவின் நினைவுகள் -1

amma6he2lc

சில தினங்களுக்கு முன்புதான் என் அம்மா இறந்து விட்டார். மரணத்தின் வலியை இப்போதுதான் மிக அருகில் இருந்து உணர்கிறேன். நோயின் பிடியில் சிக்கி அம்மா அவதியுறும் பொழுதெல்லாம் ஆற்றாமல் கதறி அழுதேன். இதற்கு ஒரு விடிவுகாலமே இல்லையா இறைவா என் அன்னை இப்படி நோயில் வாடிக் கொண்டிருக்கும் போது என்னால் எதுவுமே செய்ய இயலவில்லையே என நொந்துள்ளேன். நான் அம்மாவின் அருகிலேயே இருந்த பொழுது எப்போதும் அம்மா என்னை எழுப்புவார்கள்  [ Read More ]

Continue

முகவரி

4013537456_dd1546567a

சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வேளையில் இரயில் நிலையத்தில்தான் அவர்களை சந்தித்தேன், எனது பெட்டியில் ஏறிய பின் ஜன்னல் கம்பிகளினூடே இரயில் நிலைய நடைபாதையை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பரபரப்புடன் என்னை “ நீங்கள் மதுரை வரை செல்கிறீர்களா என கேட்டார். நான் ஆமாம் என்றேன். பக்கத்து பெட்டியில் என் மனைவியும், எனது தாயும் உள்ளார்கள் அவர்கள் இப்பொழுதுதான் முதல் முறையாக இவ்வளவு தூரம் செல்கிறார்கள் , எனது மகன் மதுரையில்  [ Read More ]

Continue
Neysam Banner box_pink1

புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு மிக மிக அவசியமானதாக உள்ளது. அத்தகைய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேசம் மற்றும் யுடான்ஸ் குழுவினர் முயன்றுள்ளனர். நேசம் மற்றும் யுடான்ஸ் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனது சிறுகதை ஆறுதல் பரிசு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேசம் குழுவிற்கும், போட்டியில் பரிசுகள் பெற்ற என் சக தோழர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்த அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கும் எனது அன்பும்  [ Read More ]

Continue
payanam

மனித வாழ்வோடு பின்னி பிணைந்திருப்பவை இலக்கியங்கள், கலைகள் இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. இலக்கியங்களை, கலைகளை, வாசிப்பை நேசிக்கும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் பயணம் இலக்கிய இதழ் வரவேற்கிறது.

Continue

மனித வாழ்வின் ஆதாரமாய் சாட்சியாய் இருப்பவை  கடிதங்கள். ஒவ்வொரு  முறை, கடிதம் எழுதும் போது வாழ்கையை, காலத்தை பதிவு செய்கிறோம். இத்தகைய சிறப்பு பெற்ற கடிதத்தின் முக்கியத்துவத்தை நாம் இப்போது முழுமையாய் இழக்கும் நிலையில் உள்ளோம். இப்படியே சென்றால்  இனி வரும் புதிய தலைமுறைகளுக்கு கடிதம் என்ற ஓன்று இருந்தது என்பதே தெரியாமல் போய்விடும். இப்பொழுதெல்லாம் குழந்தைகளின் கையில் விளையாட்டு பொருளாய் கை பேசிகளை   திணித்து விடுகிறோம்.  அப்படி இருந்தால் எப்படி உய்க்கும் உலகம். கைப்பேசியில்  நாம் பேசும்  [ Read More ]

Continue
m.a.susila-1

நாம் காணும் காட்சிகளின் ஏதோ ஒரு நிகழ்வுதான் ஒரு படைப்பை உருபெற காரணமாய் அமைந்துவிடுகிறது. எண்ணற்ற எண்ண அலைகள் மனதில் வளர்ந்து, அவை ஒரு கதையாகவோ, கவிதையாகவோ, கட்டுரையாகவோ, நாவலாகவோ அழகாய் ஒரு பூச்செடியை  போல் பூத்து குலுங்கும் போது ஒரு படைப்பு முழுமை பெறுகிறது. “தடை ஓட்டங்கள்” என்ற இந்த சிறுகதை தொகுப்பு சமூகத்தில் படிந்துள்ள பல அழுக்குகளை தெளிவாய் வாசகனுக்கு கொண்டு செல்கிறது. இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு  [ Read More ]

Continue

(ஒரே நாளில் இந்த பதிவை எழுதாமல் அவரை பற்றிய எண்ணங்களை மனதில் அசைப்போட்டு, அந்த பசுமையான நினைவுகளை மீட்டு தினமும் எழுதுகிறேன்.) நல்ல ஆசிரியராகவும், சிறந்த மனிதராகவும் வாழ்ந்த கணபதி வாத்தியாருக்கு எனது எழுத்தை காணிக்கையாக்குகிறேன். நம்பிக்கையுடன் தேவராஜ் விட்டலன் டெல்லியின் மாலை நேரத்தில், குளிர் மெல்ல மெல்ல மேனியை தொட்டுச்செல்லும் தறுணத்தில், ஊர் நினைவுகள் மனதில் எழ தொலைபேசியை எடுத்து பேசிய போதுதான் தெரிந்தது கணபதி வாத்தியார் இறந்த  [ Read More ]

Continue

தாய் – குறும்படம்

mother

 தாய் இன்றி ஏதுமில்லை.  பூமியில் நம்மை உழல செய்த அந்த தாய்க்கு நிகர் எதுவுமில்லை. தாயை அடிக்கும் கல் நெஞ்சம் படைத்தவன் கூட, ஒரு சில வேளைகளில் கண்டிப்பாய் கண்ணீர் விடுவான். எந்த ஒரு படைப்பாளனும் (கவிஞனோ, கதாசிரியனோ, இசை அமைபவனோ தாய்மையை பற்றி சொல்லிய பின்தான் அவன் அந்த தளத்தில் முழுமை அடைவான் என்ற எண்ணம் மனதில் எழுந்தவண்ணம் உள்ளது ராமினுடைய குறும்படத்தை பார்த்ததில் இருந்து. ஒரு தாயுக்கும்,  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube