Posted by DevarajVittalan on Jan - 13 - 2020

இலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன.
Continue
Posted by DevarajVittalan on Jan - 5 - 2020

எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமான உணர்வினைத் தரக்கூடியவை. சமீபத்தில் மகாராஜாவின் ரயில் வண்டி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பை படித்தேன். தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் படித்தபின் நம் மனதில் சிறு மகிழ்ச்சியையோ, சோகத்தையோ கதைகள் உருவாக்கிவிட்டுச் செல்கின்றன. பத்மாவதி என்ற பெண்ணின் அகமனதின் ஏக்கங்களை “கொம்புளானா” என்ற சிறுகதையில் கூறியிருப்பார். பத்மாவதி தன் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் பணிகளை , கணவன் முதல்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 16 - 2019

தன் நிழலில் ஒதுங்குபவர்களிடம் வாடகை கேட்பதில்லை மரங்கள்!
Continue
Posted by DevarajVittalan on Dec - 15 - 2019

இன்று எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் பிறந்தநாள். வண்ணநிலவன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. அவரது ரெய்னீஸ் ஐயர் தெரு , கடல்புரத்தில் , நாவல்களும் , எஸ்தர் மற்றும் சில சிறுகதைகளும் படித்துள்ளேன். இன்றைக்கு இரயில்பயணத்தினூடே அவரது சாரதா என்ற சிறுகதையை கிண்டலில் படித்தேன். கிண்டலில் மேலும் அவரது சில நூல்கள் உள்ளது. மறக்கமுடியாத மனிதர்கள் என்ற கட்டுரைத்தொகுப்புகளும் நான்கு பகுதிகளாக உள்ளது. சாரதா சிறுகதை 70
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 15 - 2019

தன்மீதுச் செல்லும் இரயில்சக்கரங்களின் சுமையை புன்னகைத்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு வெய்யிலிலும் பனியிலும் மழையிலும் இருப்பு கொண்டிருக்கின்றன.. மாநில பேதமின்றி அனைவரையும் தன் இரும்பு தேகத்தால் கட்டி இணைக்கின்றன..
Continue
Posted by DevarajVittalan on Dec - 14 - 2019

இரயிலோடிச் செல்லும் தண்டவாளத்தின் மீதும் தன் வண்ணச் சிறகைச் சிலுப்பி அமர்ந்து செல்கிறது ஒர் பட்டாம்பூச்சி.. ********* பிரிவென்பது புரிதலின் ஆரம்பம்தானே! ********** இடம்பிடித்து ஜன்னலிருக்கை கிடைத்து நடை மேடையில் ரொட்டிகளை அழகாக கொத்தி தின்னும் மைனாக்களைப் பார்ப்பது ஆனந்தம் பேரானந்தம்! ************
Continue
Posted by DevarajVittalan on Dec - 14 - 2019

சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் புத்தக கடைகளில் “ நீலகண்ட பறவையைத் தேடி என்ற வங்க நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தேன். இரயில் நிலையத்தில் எதிரில் உள்ள மல்லிகை புத்தக கடை , இலக்கியப் பண்ணை, கோவில் வீதியில் உள்ள நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என எனக்குத் தெரிந்த புத்தக கடைகளில் தேடினேன். கிடைக்கவில்லை… பின் தங்க ரீகல் தியேட்டர் முன் உள்ள
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 4 - 2019

வாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில் நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில் சாகித்திய அக்காதெமி விருது
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 4 - 2019

எல்லோருக்குள்ளும் ஒரு சுவர் உண்டு சுவர்கள் நம்மை புறத்திலிருந்து பாதுகாக்கத்தான் அச்சுவர்களே அழிக்கும்சுவர்களாகி எளிமையானவர்கள் இப்போது இல்லாமல் போனார்கள்..
Continue
Posted by DevarajVittalan on Nov - 29 - 2019

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. ` என்ற குறளின் பொருளுக்கேற்றார்போல் , தான் கற்றுக்கொண்ட நூல்கள் பற்றியும் , தன்னுள் எழும்பிய சமுதாயக்கருத்துக்களையும் “ நவில்தொறும்” என்ற இந்தப் புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர் எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள். வாசிப்பின் முதல்படியில் இருக்கும் தோழர்களுக்கு இந்தப்புத்தகத்தின் வாயிலாக பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். புத்தகத்திலுள்ள பத்தொன்பது கட்டுரைகளில் எவற்றையும் தவிர்க்க இயலாது வாசிக்க
[ Read More ]Continue