. தொலைதூரத்தில் பாலை மணல்வெளியில் ”ஆர்மட் ரெஜிமெண்டினர் செய்துவரும் போர் பயிற்சியினால் எங்கள் கம்யூனிகேசன் இராணுவ முகாம் வரை இடைவிடாத ”டம் டம்மென” குண்டு சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இராணுவ பேரக்கின் முன்பு இருக்கும் அரசமரமும், வேப்பமரமும் மழைவேண்டி தியானித்திருப்பது போல் சலனமற்று நின்றிருந்தது. வெண்மையான துகள் துகளான மணலின் ,மேல் கட்டெறும்புகள் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. கருமேகங்கள் வானில் வேகமாக நகர்ந்து வந்தது. குளிர்காற்று வீசத்துவங்கியது மழையோடு சம்பாசனை செய்வதுபோல் [ Read More ]Continue
சிட்டுக்குருவியொன்று வெய்யில் தகிக்கும் இராஜஸ்தானின் நண்பகல் வேளையிலும் தன் கூட்டிற்காக , சிறு சிறு குச்சிகளை சேகரித்துக் கொண்டு கருவேலமரங்களினூடே இங்கும் அங்குமாய் உற்சாகமாய் பறந்துக்கொண்டிருந்தது. சாலை நெடுகிலும் நிறைந்திருக்கும் கருவேலமரங்களின் நிழல்கள் அழகிய ஓவியங்களாய் சாலையின் மீது படிந்திருப்பது கேசவனின் கண்களுக்கு அழகாய்த் தெரிந்தது. தூரத்தில் இராணுவ வீரர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் மஞ்சள் வர்ண அழகிய குடியிருப்பு வீடுகளை கேசவன் ஏக்கத்துடன் பார்த்தான். இந்தக் கொரோனா நோய்த் தொற்று [ Read More ]Continue
பாஸ்கல் (PASCAL) பள்ளிக்குச் செல்லும்போது கயிறுகட்டப்பட்ட ரெட்பலூன் ஒன்று கம்பத்தில் சிக்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறான். கம்பத்தில் ஏறி பலூனை எடுத்து தன்னோடு கொண்டு செல்கிறான். பேருந்தில் பலூனோடு ஏற முயற்சிக்கும் பாஸ்கலை நடத்துனர் பேருந்தில் ஏற மறுதலிக்கிறான். ஏமாற்றத்தோடு நின்றிருக்கும் பாஸ்கல், பின் வேகமாக பலூனைப் பற்றிக்கொண்டே நகரத்தினூடே ஓடியே பள்ளியை வந்தடைகிறான். பள்ளிக்குள் துப்பரவுப் பணி செய்துகொண்டிருக்கும் பெரியவரிடம் பலூனைக் கொடுத்து பலூனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் எனக் கூறிவிட்டு தன் [ Read More ]Continue
பெரிய ஹால்ஸ்கார்பியோ கார் நிற்கிறஅளவு போர்டிகோவெஸ்ட்டனும் இண்டியனும்வைத்த டாய்லட் பாத் ரூம்டயனிங் ஹால்இரண்டு பெட்ரூம் வித் அட்டாச்பாத் ரூம் என அனைத்துவசதிகளும் கொண்ட வர்ணங்கள்அழகாய் பூசிய வீட்டில்இல்லைஅம்மாவின் வாசமும்அன்பின் நேசமும்பால்யத்தின் நினைவுகளும்.Continue
ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாக கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். இராஜஸ்தான் என்றால் அனைவருக்கும் உடனே நினைவு வருவது பாலைவனமும், ஒட்டகங்களும், வெக்கையும்தான் ஆனால் மணல் நிறைந்த பாலை நிலத்தில் குளிரும் மிகுதியாகவே இருக்கும் என்பதை வெகுசிலரே அறிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட குளிர்மிகுந்த, பனிபடர்ந்த [ Read More ]Continue
தனிமையில் இருக்கும் தன் வாழ்க்கையில், தனது கடந்தகால வாழ்வை நினைத்தபடியே வாழும் செங்காடனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, இந்த கல்லும், மண்ணும் நாவல். நிலத்தையும், நிலம்சார்ந்த நினைவுகளையும், தன்னுள்ளையே அசைபோட்டபடி வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் செங்காடன். செங்காடன் தான் நாவலின் முதன்மை கதாபாத்திரம். நேரடியான வர்ணனைகளை தவிர்த்து, கதாபாத்திரங்களின் வழியாய் ,புனைவை முதன்மை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர். கோவை நகரின் அருகில் வசிக்கும் விவசாயி செங்காடன், தனக்கென உறவுகள் எதுவுமின்றி [ Read More ]Continue
தினம்தோறும் அதிகாலை கண்விழிக்கச் செய்கிறது இந்தப் பறவையின் சப்தம்… தன் இனிய சப்தத்தினால் அதிகாலையை ரம்மியமாக்குகிறது இந்தப் பறவை.. இராஜஸ்தானின் இவ் வெக்கை மிகு நாட்களில் ஒரு வேம்புவின் கிளையில் அமர்ந்து வலையிட்ட ஜன்னலுக்குள் துயில்கொண்டிருக்கும் என் மேல் இந்த வெண்ணிறப் பறவைக்கு ஏன் இந்த கரிசனம்.. இந்த அழகிய பறவையின் உருவில் இருப்பது யார்? என் மீது அன்பை பொழிந்த முன்னோர்களா? பால்யத்தில் தோழமையோடு சுற்றித்திரிந்து மறைந்துபோனப் பள்ளித்தோழனா? [ Read More ]Continue
எல்லோருக்குள்ளும் எல்லாம் தெரிந்தவனும் எதுவும் தெரியாதவனும் இருக்கின்றான்.. சில நேரத்தில் எல்லாம் தெரிந்தவன் கர்ஜிக்கிறான்.. சில நேரத்தில் எதுவும் தெரியாதவன் மௌனித்திருக்கிறான்.. எல்லாம் தெரிந்தவனின் கர்ஜனையை யாரும் கேட்பதில்லை.. ஏனோ எல்லாம் தெரிந்தவனைவிட எதுவும் தெரியாதவனைத்தானே உலகம் நேசிக்கிறது..Continue
கிறிஸ்துமஸ் சமயத்தில்.. (ஆண்டன் செக்காவ்) தமிழில் : எம்.ஏ.சுசீலா ஆண்டன் செக்காவ் கதையை மிக எதார்த்தமாக நகர்த்திக்கொண்டு போய் முடிவில் மனதில் கதாபாத்திரங்களின் மேல் அன்பை, ஏக்கத்தை மனதில் உண்டாக்கிவிடுவார். செக்காவின் எளிய எதார்த்தமான நகைச்சுவை உணர்வு மிக்க கதை சொல்லல் முறைக்குத்தான் அனைவரும் செக்காவ்வை இன்றளவும் விரும்பி படிக்கிறார்கள். சமீபத்தில் கனலி தளத்தில் வெளியாகியுள்ள ”கிறிஸ்துமஸ் சமயத்தில்” என்ற சிறுகதையை படித்தேன். எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு [ Read More ]Continue
2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாதமி விருதுபெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறியபொழுது ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டேன் படிக்க நன்றாக உள்ளது, நீங்க வேணுமுன்னா படிச்சிட்டு குடுங்களேன்” என்றார். எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் அவர்களிடம் வாங்கிய சூல் நாவலை அன்றைய இரவிலேயே படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண்முன்னே [ Read More ]Continue