தாய் – குறும்படம்

 தாய் இன்றி ஏதுமில்லை.  பூமியில் நம்மை உழல செய்த அந்த தாய்க்கு நிகர் எதுவுமில்லை. தாயை அடிக்கும் கல் நெஞ்சம் படைத்தவன் கூட, ஒரு சில வேளைகளில் கண்டிப்பாய் கண்ணீர் விடுவான்.

எந்த ஒரு படைப்பாளனும் (கவிஞனோ, கதாசிரியனோ, இசை அமைபவனோ தாய்மையை பற்றி சொல்லிய பின்தான் அவன் அந்த தளத்தில் முழுமை அடைவான் என்ற எண்ணம் மனதில் எழுந்தவண்ணம் உள்ளது ராமினுடைய குறும்படத்தை பார்த்ததில் இருந்து. ஒரு தாயுக்கும், மகனுக்கும் உள்ள உள்ளத்து உணர்வுகளை சொல்லி உள்ளார் இயக்குனர் ராம் .

சாலையோரத்தில் விளும்பு நிலையில் வாழும் தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசம், அந்த ஏழை தாய் தன் குழந்தையை வளர்க்க பாடுபடும் காட்சிகள் மனதை கனக்க செய்துவிடுகிறது. முன்பு நடந்த நிகழ்வுகள் மனதில் எழுகிறது. அந்த பால்யத்தின் பார்வையில் தாய் மனதில் நிறைந்து தெரிந்தால்.

அந்த பத்து பைசா வை பாசத்தோடு அம்மா தரும்போது, மனம் நிறைய சந்தோசம் பூத்திருந்தது, இன்று பல ஆயரம் நோட்டுக்கள் கையில் இருந்தாலும், அந்த சந்தோசம் தொலைந்து போயிருக்கிறது.

ஏனெனில் அந்த பத்து பைசா பாசத்தோடு அம்மா தந்ததல்லவா…

ஏழு நிமிட படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லியதற்காக ராமுக்கு அடிக்கலாம் ஒரு சல்யூட்.

படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

http://youthful.vikatan.com/youth/Nyouth/thai23112009


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube