கதை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆயிசாவின் உள்ளார்ந்த வார்த்தைகளோடு திரையில் காட்சி விரிகிறது. தனது வாலிப மகன் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையை பிடிமானமுள்ளதாக அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் ஆயிசா. ஆனால் சலீம் என்ற அவளது மகனோ எந்த ஒரு பிடிமானமும் இன்றி மறுதலிக்கிறான். இந்நிலையில் சலீம் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளும் அவனை உயிருக்கு உயிராய் விரும்புகிறாள் .

காலம் கழிகிறது பகலும் இரவும் மாறி மாறி வருகிறது ஆனால் ஆயிசாவின் ஏக்கங்கள் மட்டும் பெருகிக் கொண்டே செல்கிறது.

பாகிஸ்தானில் உள்ள அரசியல் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. அந்த குழவின் பிரசிங்கிகள் ஆயிசாவின் ஊருக்குள் பிரவேசிக்கிறார்கள். அதுவரை வெள்ளந்தியாக இருந்த சலீமின் மனதில் அரசியல் நஞ்சை விதைக்கிறார்கள். சலீம்  சிறிது சிறிதாக அவர்கள்  வசமாகிறான். தன் மகன் தவறான பாதையில் செல்கிறான் என தெரிந்து ஆயிசா உள்ளுக்குள் வேதனை கொள்கிறாள். சலீமிக்கு புத்தி சொல்கிறாள் அவன் நிராகரிக்கிறான்.

அவனை மறக்க முடியாமல் அவனது காதலியும் “நீ செல்லும் பாதை தவறானது சலீம். அவர்கள் நம் வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள் சலீம் என கெஞ்சுகிறாள். நான் இஸ்லாத்தை நேசிக்கிறவன் எனக்கு தெரியும் இஸ்லாத்தை மையமாக கொண்டு புதிய அரசியலை பாகிஸ்தானில் தோற்றுவிப்போம் என்னை மறந்து விடு என கூறிவிட்டு சென்று விடுகிறான். அவள் அவன் நினைவாகவே உள்ளாள்.

 ஆயிசாவின் மனதில் பழைய நினைவுகள் வழிந்தோடுகிறது. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டு உள்ளது.

 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிறைய பெண்கள் பல பெண்கள் இரு தரப்பிலும்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பஞ்சாப் பகுதியில் இருந்த, பாகிஸ்தான் வசம் சென்று விட்ட பகுதியில் இருந்த சீக்கிய மக்கள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு உயிருக்கு பயந்து கூட்டம் கூடமாய் வெளியேறுகின்றனர்  தங்கள் பெண்களை காப்பாற்ற முடியாமல், முஸ்லீம் இளைஞர்கள்  வசம் கிட்டாமல் செய்ய அவர்களை தற்கொலை செய்ய தூண்டுகின்றனர். அவ்வாறு ஆயிசாவின் அப்பாவும் ஆயிசாவை கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய தூண்டுகிறார், ஆயிசா உயிருக்கு பயந்து ஓடுகிறாள் அப்போது முஸ்லிம் சமுகத்தை சேர்ந்தவர்கள் அவளை அடிக்கிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறார்கள் அங்கிருக்கும் ஒரு நல உள்ளம் கொண்ட வாலிபன் சீக்கிய பெண்ணான ஆயிசாவை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறான். நிராகரித்து விடப்பட்ட சீக்கிய பெண்ணான ஆயிசா அவன் மடியில் சாய்ந்து கொள்கிறாள்.

காட்சி 1974 -ல் விரிகிறது பல வருடங்களுக்கு பின் பஞ்சாப் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்திய அரசு ரயில் விடுகிறது அதில் பாகிஸ்தான் வசம் இருக்கும் பகுதியில் இருந்து வந்த மக்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் தங்கள் உடமைகளையும் பார்க்க பல சீக்கிய குடும்பங்கள் அந்த ரயில் பயணித்து வருகிறது.

முஸ்லிம் வாலிபர்கள் சீக்கியர்களை கண்டு பகடி செய்கிறார்கள் அவர்களுள் சலீமும் உள்ளான்.  ஆயிசாவின் சகோதரனும் தனது சகோதரியை தேடி அலைகிறான், பல தேடுதலுக்கு பின்  ஆயிசாவை கண்டு கொள்கிறான்.

மரண படுக்கையில் தந்தை இருப்பதாகவும் உன்னை பார்க்க துடிபதாகவும் நீ ஒரு முறை என்னோடு வா என அழைக்கிறான். ஆனால் ஆயிசா கோபம் கொள்கிறாள். என்னை கொலை செய்து விட்டுதானே சென்றீர்கள் இப்போது ஏன் வருகிறீர்கள் என, தன் உள்ளார்ந்த ஆதங்கத்தை வெளிபடுத்துகிறாள். அப்போது அங்கு வரும் சலீம் இவ்விசயம் கண்டு கோபம் கொள்கிறான். பின் தன் தாய் ஒரு சீக்கிய பெண் என தெரிந்து மனம் நொந்து கொள்கிறான்.

உண்மை தெரிந்ததும் தன் மகன் தன்னை ஏற்று கொள்ள போவதில்லை என அறிந்து கொள்கிறாள். தான் யாருக்காக உயிர் வாழ்கிறோமே அவனே தன்னை வெறுக்கிறான் என தெரிந்து ஆயிசாவின்  தந்தை முன்பு குதிக்க சொன்ன அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

தன் தாய் கடைசி வரை ரகசியமாய் வைத்து வழிபாடு செய்த சீக்கிய சாமான் நிறைந்த பெட்டியை ஆற்றில் விட்டு விட்டு வரும் போது தனது காதலியை காண்கிறான். அவளுக்கு தனது அம்மாவின் செயினை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறான்.

நகரத்தில் காட்சி விரிகிறது சலீமின் காதலி அவள் ஆசை பட்டது போலவே படித்து நகரத்தில் பணி புரிகிறாள் சலீமின் நினைவாகவே வாழ்ந்து வருகிறாள்.

தொலைகாட்சியில் சலீம் தோன்றுகிறான் அவன் இப்போது ஒரு அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராக  உள்ளான். ஆனால் இன்னும் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை போராடி கொண்டுதானுள்ளான். வழி நிறைந்த மனதோடு அந்த காட்சியை கண்டுவிட்டு கடந்து செல்கிறாள் அவன் நினைவாகவே வாழும் அவனது காதலி.

எழுத்துக்கள் திரையில்  எழும்பி வர படம் நிறைவடைகிறது.

திரைபடத்தில் வரும் இசையே படத்தின் அடிநாதமாக உள்ளது.

நிராகரிப்பை சுமந்து வாழும் தருணங்களைப் போல மிகவும் கொடுமையானது வேறெதுவும் இல்லைதானே…

திரைபடத்தின் விவரம்  (இங்கே  அழுத்தவும் )


Directed by Sabiha Sumar
Produced by Aamir Ali Malik
Written by Paromita Vohra
Starring Kiron Kher, Shilpa Shukla
Release date(s) 2004
Running time 105 min.
Country Pakistan
Language Punjabi / Urdu


3 Responses so far.

  1. saraswathi says:

    nice

  2. lathasaravanan says:

    நன்று வரிகளில் காட்சிகள் கண்முன்பு தெரிகிறது


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube