வானில் இருந்து பூமிக்கு ஒரு விசித்திரமான ஓர் பொருள் வருகிறது அது அடர்ந்த காட்டிற்குள் வந்து விழுகிறது. படம் இவ்வாறு தொடங்குகிறது. ஸ்டெல்லா படத்தின் கதாநாயகி.. கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தி கொண்டுள்ளாள். கல்லூரி முடிந்ததும் கிராண்ட் என்ற ஒருவன் வந்து ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு செல்கிறான்.

அருகில் இருப்பவர்கள் ஸ்டெல்லாவின் வறுமையான குடும்ப சூழ்நிலைதான் கிராண்ட் போன்ற வயதான ஒருவனை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் விட்டு விட்டது. என ஸ்டெல்லாவிற்காக தங்களது அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றனர். கிராண்ட் வயதான தோற்றத்தில் உள்ளான். ஸ்டெல்லாவோ இளமையாகவும் அழகாகவும் உள்ளாள். காவல்துறை அதிகாரியாக ஒருவரை காட்டுகிறார்கள் அவன்தான் படத்தின் கதாநாயகன் பெல். பால்ய பருவத்திலிறிந்தே ஸ்டெல்லாவை காதலித்து வந்தவன். அவள் மனதிலும் காதல் இருந்தது.. வழக்கமான நம்ம ஊர் பாணிதான் வறுமை (தங்கச்சிகள், அக்காக்கள், வயசான அம்மா) இவர்களுக்காக தன் காதலை வெளிபடுத்தாமல் கிழவனை திருமணம் செய்து கொள்கிறாள்.

ஒருநாள் கிராண்ட் அந்த காட்டிற்குள் விழுந்து கிடக்கும் வானில் இருந்து வந்த பொருளை (ஜந்துவை) பார்க்கிறான். அப்பொழுது அவன் கூட பிராண்டா என்ற வேறொரு பெண் உள்ளாள். அவள் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் அந்த ஜந்துவின் அருகில் செல்கிறான் கிராண்ட். தீடிரென்று ஜந்து வெடித்து அதிலிருந்து வரும் நீண்ட குழாய் போன்ற இல்லை கைபோன்ற ஓன்று வந்து கிராண்டின் வயிற்றில் குத்தி ரத்தத்தில் கலக்கிறது. அன்றிலிருந்து கிராண்டின் நார்மல் வாழ்க்கை பாதிக்கப் படுகிறது.

நம்ம ஊர் பாசையில் சொல்லணும் என்றால் பேய் பிடித்தது போல் உள்ளான் (பேய் இருக்கு இல்லை என்பது அப்பாற்பட்ட விஷயம்). ஸ்டெல்லாவிற்கு சந்தேகம் வருகிறது. கிராண்ட் நல்லவன்தான் மனைவி ஸ்டெல்லாவின் மேல் உயிராய் இருக்கிறான். பிராண்டா ஒரு முறை தவறாய் நடக்க முயற்சிக்கும் போது என் பொண்டாட்டிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்னைய மன்னிச்சிறு என்று சொல்லும் காட்சியில் கிராண்டின் காதலை நமக்கு உணர்த்துகிறார் டைரக்டர் “ஜேம்ஸ் கன் “.

ஆனால் கிராண்டின் உடலுக்குள் கலந்துவிட்ட அந்த ஜந்துவின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. அந்த நகரில் உள்ள பல நாய்கள் காணாமல் போகிறது. கிராண்ட் வீட்டில் இருக்கும் ஒரு அறையை பூட்டி வைத்திருந்தான். ஸ்டெல்லா எதுக்கு பூட்டி இருக்கிறீர்கள் என கேட்கிறாள் அதற்கு கிராண்ட் ஒரு வாறு சமாளித்து விட்டு செல்கிறான். ஸ்டெல்லாவுக்கு சந்தேகம் கூடுகிறது ஆனால் கிராண்ட் மேல் இருக்கும் அன்பு அப்போதும் குறையாமல்தான் உள்ளது. ஒரு நாள் பிரண்டாவிடம் சென்று உடல் உறவு கொள்கிறான். கிராண்டின் உள்ளே இருக்கும் ஜந்துவை கண்டு கொண்ட அவள் கதறுகிறாள். பின்பு பிராண்டாவை கடத்திக்கொண்டு சென்று விடுகிறான் கிராண்ட். போலீஸ் ஸ்டெல்லாவிடம் வந்து விசாரித்த பின் அவள் அந்த பூட்டி வைத்த அறையை உடைத்து பார்க்கிறாள்.

அங்கே அந்த நகரில் தொலைந்து போன நாய்களின் உடல்கள் உள்ளது அறையில் ஒரு வித நாற்றம் அடிக்கிறது. அவள் போலீசுக்கு போன் செய்கிறாள். பின்பு வழக்கம் போல் தேடுதல்.. சண்டை. ஓட்டம் என கதை நகர்கிறது. இடை இடையே ஜந்துவை பற்றி கேரக்டர்கள் மூலம் நமக்கு புரிய வைக்கிறார் டைரக்டர் “ஜேம்ஸ் கன் “..

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த அந்த ஜந்து மனித உடலுக்குள் சென்று மூளையை பாதித்து தன் கட்டுபாடுக்குள் கொண்டு வருமாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தையே தன் இனமாக மாற்றி விடுமாம்.

அதனுடைய உணவே ரத்தம்தான் விலங்குகள் மனிதர்கள் என எல்லா ரத்தத்தையும் சகட்டு மாணிக்கு குடிக்குமாம். இதை தடுக்க வேண்டும் என்றால் கிராண்ட் சாக வேண்டும்.

முடிவில் காவல் துறை அதிகாரியாக வரும் பெல்லின் மூலம் கிராண்ட் கொல்ல படுகிறான் மனித சமுதாயம் காப்பாற்றப் படுகிறது.

வழக்கமான கதை என்றாலும் சில இடங்களில் டைரக்டர் நம் மனதை தொட்டு விடுகிறார். தன் கணவனை கொல்ல போகும்போது ஸ்டெல்லா தடுமாறுவதும், நீ திருந்தி வா நாம பழைய படி நல்லா வாழலாம் என ஸ்டெல்லா கூறும்போதும் மனதில் நிற்கிறாள். மொத்தத்தில் ஒரு திரிலறான படம்.

One Response so far.

  1. Manimegalai says:

    படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube