எதிரொலி…


குளிர் குறைந்துவிட்டது, அறையெங்கும் புத்தகங்கள் நிறைந்துள்ளன. எதையாவது வாசித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போட்டியும், பொறாமையும் நிறைந்துள்ளது, அண்டை வீட்டில் தொடங்கி, உலகம் முழுவதும், இலக்கியத்திலும் கூட போட்டியும், பொறாமையும் நிறைந்திருப்பதைக் காணும் பொழுது மனதில் எரிச்சல் மேலெழுகிறது, சோர்வு வருகிறது.

ஒருவருக்கு விருதுகிடைத்தாலோ, ஒருவருக்கு பாராட்டுவிழா நடந்தாலோ, அந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவு விபரங்களை விட, அந்த நிகழ்ச்சி பற்றிய நெகட்டிவான விசயங்களையே அதிகம் எழுதுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, எஸ்.ராவிற்கும், காவல் கோட்டம் எழுத்தாளர் (சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும்) சு.வெங்கடேசன் அவர்களுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை, ஊடகங்கள் ஊதி பெருக்குகின்றன.

எதிர்மறை கருத்துகளால் பாதிக்கப்பட்ட சு. வெங்கடேசன் அவர்களே, எனது விருது பற்றிய எஸ்.ராவின் எண்ணங்கள் அவருடையது, படைப்பை பற்றிய விமர்சனங்களை இன் முகத்துடன் எதிர்கொள்வதே எழுத்தாளனின் கடமை என அவற்றை எதிர்கொள்ளும் போது இடையில் இருக்கும் ஜால்ரா பார்ட்டிகள் ஏன் தேவையில்லாமல் இந்த விசயத்தை ஊதி பெருக்குகிறார்கள் என தெரியவில்லை.


கிரிக்கெட்டில் இந்தியா வாங்கி வரும் அடியை பற்றி ஊடகங்கள் கிழி, கிழியென கிழிக்கும் இவ்வேளையில். கிரிக்கெட்டை பார்க்கும் பார்வையாளன் என்ற பார்வையில் எனது எண்ணங்களையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறென். கிரிக்கெட்டில் அதிக பணம் புழங்க ஆரம்பித்த காரணத்தினால் தொடர்ந்து எந்த ஒரு இடைவெளியும் இன்றி, வீரர்களுக்கு ஓய்வு இன்றி அதிக மேட்ச் விளையாடபடுகின்ற காரணத்தினால், விளையாட்டு வீரர்கள் முதல் கொண்டு பார்வையாளர்கள் வரை அனைவரும் களைத்து விட்டனர்.  ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் கால அவகாசம் வேண்டும், அதேநேரத்தில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நமது தேசிய விளையாட்டான காக்கிக்கும் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.


One Response so far.

  1. Mega says:

    கிரிக்கெட் வீரர்கள் குறித்து தாங்கள் கூறிய கருத்து மிகவும் உண்மை….


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube