ஞாயிற்று கிழமை மாலைப் பொழுதில் தில்லி, தமிழ்ச் சங்கத்தில் எஸ்.ரா வின் உரையை கேட்க முடிந்தது. அதற்கு முன் திருமதி எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் என்னை எஸ்.ராவிற்கு அறிமுக படுத்திவைத்தார். எஸ்.ராவுடன் கை குலுக்கியபோது, மனதில் மகிழ்ச்சி நிறைந்தது.ஏற்கனவே அவரை பல முறை கண்டு பேசியுள்ளேன்.
மதுரை புத்தக திருவிழாவில், எஸ்.ரா வை முதன் முதலில் சந்தித்து எனது கைக்குட்டை கனவுகள் என்ற நூலை கொடுத்தது. மீண்டும் அவரது நூல் வெளியீட்டு விழாவின் போது சென்னையில் சந்தித்து பேசியது என அனைத்தையும் எஸ்.ரா நினைவு வைத்திருந்தார்.
அந்த இனிய சந்திப்பில் என் நினைவில் இருக்கும் கலந்துரையாடலை இங்கே பதிவு செய்கிறேன்.
வாசகர் :- புத்தகத்தை எப்படி அனுக வேண்டும், எப்படி வாசிப்பு பழக்கத்தை கொண்டுவர வேண்டும் தாங்கள் இரயில் பயணத்தில் நான்கு நூல்களை வாசித்து விடுவேன் என்று கூறுகிறீர்களே, அது எப்படி சாத்தியம்?
எஸ்.ரா:- ஒரு ஆரம்பகட்ட வாசகன் சிறிய, சிறிய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் , புத்தகத்துடனான உறவை ஆரம்பிக்கலாம் .
வாசகர்:- புத்தகங்களின் விலை இப்படி அதிகமாக உள்ளதே, சாமான்யர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் அதன் விலை மலைக்க வைக்குதே?
எ ஸ்.ரா :- காகிதங்களின் விலை அதிகரிப்பே , புத்தகங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். சென்னையில் ஒரு இட்லிகடையில் இரண்டு இட்லி 80 ரூபாய் என்கிறார்கள். அந்த கடைக்கும் சென்று மக்கள் சாப்பிட்டுக் கொண்டுதானே உள்ளனர். அப்படி இருக்கும்போது , புத்தகங்களை விலைவாசியை முன்னிருத்தி தள்ளிவைப்பது எப்படி.
(இந்நிலையில் எனக்கு , திருமதி. எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களும் கூறிய கருத்து நினைவில் வந்தது, அதிகமான பக்கங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் விலை பற்றியே கவலை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.பக்கம் கூடுதலாகும்போது விலை கூடுதலாவது இயற்கை.இது எந்தப் பொருளுக்கும் பொருந்தும் என்றபோது புத்தகம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்?ஒரு திரைப்பட டிக்கெட்டுக்கு 100,200 என்று செலவழித்துப் பார்க்கத் துடிக்கும் நாம் புத்தக விலை என்று வரும்போது மட்டும் ஏன் தயங்கி விடுகிறோம்?வாங்கும் சக்தியும் புத்தகத்துக்குக் காசு செலவழிக்கும் விருப்பமும் இருப்பவர்கள் வாங்கி விட்டுப் போகிறார்கள்.மற்றவர்கள் நூலகங்களிலோ நண்பர்களிடமோ பெற்றுப் படிக்க வேண்டியதுதான்.இதில் என்ன குறை இருக்கிறது?ஒரு காலத்தில் மிகத் தடிமனான கல்கியின் நாவல்களையெல்லாம் நானும் கூட நூலகத்தில் படித்தவள்தான்.இப்போது வாங்க முடிவதால்,படித்து முடித்த பிறகு நண்பர்களுக்கோ நூலகத்துக்கோ தந்து விடுகிறேன்.
இரண்டாவதாகப் புத்தக விற்பனை உத்திகள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் விளம்பரம் தேவைப்படும் இந்தக்காலத்தில்- நடிகர்களின் கட்டவுட்டுக்குக் குடம் குடமாகப் பால் கொட்டப்படும் அழுகிப் போன சமூக அமைப்புக்கு நடுவே,ஒரு நூலாசிரியருக்கும் அவரது நூலுக்கும் பேனர் வைக்கப்படுவதில் எந்தப் பெரிய பிழையைக் கண்டு விட்டீர்கள்?அது அறிவு சார்ந்த ஒரு எழுச்சி என்று ஏன் உங்களால் கொள்ள முடியவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை.
இறுதியாக ஒன்று..தமிழகத்தைப் பொறுத்த வரை என்ன விளம்பரம் செய்தாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் எழுத்தை மட்டும் நம்பி ஒரு எழுத்தாளன் காலத்தை ஓட்டி விட முடியாது என்பதே வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் உண்மை.இன்று வரையிலும் கூட -வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் விஷயத்திலும் கூட-அது உண்மையாக இருப்பதனாலேதான் எழுத்தை முழுநேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.)
http://www.blogger.com/comment.g?blogID=973777845258784986&postID=3290462909925395836
வாசகர்: எப்படி எழுத்தை நம்பியே வாழ முடிகிறது?
எஸ்.ரா:- நான் எப்போதும் எனது காலண்டரில் விடுமுறை நாட்களை நானே தீர்மானிக்கிறேன். வருடத்தில் சில மாதங்களே பணி புரிவேன் . மீதமிருக்கும் மாதங்களில் ஊர் சுற்ற கிளம்பி விடுவேன். குறிப்பாக மே மாதம், எந்த ஒரு முக்கியமான வேலையாக இருந்தாலும், தள்ளிப் போட்டுவிட்டு என் குடும்பத்தோடு செலவிடுவேன். குடுபத்தோடு பல இடங்களுக்கு செல்வேன். எனக்காக வருடம் முழுவதும் ஒத்துழைக்கும் குடும்பத்திற்கு நான் செய்யும் மிகச்சிறிய ஒத்துழைப்பு இது.
வாசகர்: தங்களின் யாமம் புதினத்தில் வரும் அத்தரின் மணம் பற்றி..
எஸ்.ரா:- அத்தர் ஒரு குறியீடு, வாழ்க்கையின் நிலையாமையை சுட்டிக்காட்டுகிறது. அத்தரை கைகளில் தடவினால் சில மணி நேரம் வாசனை தறும் , பின் தறாது இதுதான் வாழ்க்கையின் உண்மை நிலை. நாம் அத்தரை போல் வாசம் கொடுத்து, பிறருக்கு நன்மை செய்தே வாழ வேண்டும்.
பின் கூட்டம் தொடங்கியது , அரங்கில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர்.
டெல்லியில் நடக்கும் உலக புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள வந்த எனக்கு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. டெல்லியை பற்றிய என் நினைவுகளில், எப்போதும் என் நினைவில் இருப்பது கா.நா.சு., அவர்கள்தான் . இது கா.நா. சு அவர்களின் நூற்றாண்டு மேலும் ஆதவன், கணையாழி ஆசிரியர் என தமிழின் முன்னோடி படைப்பாளிகளை இந்த மேடையில் நினைவு கொள்கிறேன். என்றார்..
கதை என்பது வெறும் கதை அல்ல.. அது நம் வாழ்க்கையின் அக தரிசனம். விழித்து கொண்டே காணும் கனவுதான் கதை.. ஆழமான புரிதல், கதை என்பது நம் கலாச்சாரத்தின் அடையாளம். என்றார்..
இன்னும் எவ்வளவோ அந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையை தனது இலக்கிய உரையாடலால் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருந்தார் எஸ்.ரா – விரைவில் அவரது உரையை இணையத்தில் பதிவு செய்கிறேன்.
அன்று என்னால் வர இயலாததற்கு வருத்தப்பட்டேன்.
ஓ .. எஸ் ரா – உங்க ஊர்சா?
மதுரை புத்தகத்திருவிழாவில்தான் நானும் எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்தேன். அவருடைய ஐந்து நாவல்களையும் வாசித்துவிட்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். பகிர்விற்கு நன்றி.