இயற்கையை அறிதல் – 3

அதிகாலையிலேயே எழுந்து ஹரிதுவாருக்கு சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறங்களிலும் நிறைந்திருந்த பசுமையான மரங்கள் மனதிற்கு சந்தோசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

இருபத்தி ஐந்து ரூபாய் கட்டணம் வசூலித்தார் ஆட்டோக்காரர். சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே கங்கை வளைந்து, வளைந்து பூமியில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி மனதிற்கு சந்தோசமாய் இருந்தது. வாடைக் காற்று நெஞ்சை தொட்டுச் சென்று கொண்டிருந்தது.

ஹரிக்கிபௌடியின் அருகில் ஆட்டோ நின்றது. கங்கையை நோக்கி சென்றேன். ரிஷிகேசில் பாயும் கங்கையைவிட,  இங்கே வேகம் அதிகம் கொண்டிருந்தாள்.

ஹரிதுவாடியில் கங்கை

 காவடி எடுத்துக் கொண்டும், கோஷங்கள் போட்டுக் கொண்டும் கங்கை கரைகளில்  மக்கள் அதிகம் இருந்தனர். இந்து மததில் மிகவும் புனித தளமாக போற்றப்படும் இந்த ஹரிக்கிபௌடியில் கால்களை நனைத்தேன். சில முக்கியமான ஆவனங்கள் கைகளில் வைத்திருந்ததால், பாதுகாப்பு கருதி குளிப்பதை தவிர்த்தேன், ரிஷிகேஸிற்கு சென்று, திரிவேணி சங்கமத்தில் சாயங்காலம் குளிக்கலாம் என முடிவு செய்திருந்தேன்.

கங்கை வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். கங்கையின் பிரவாகத்தை கண்டுகொண்டே இருந்தேன். மனதில் பல வகையான உணர்வுகள் பொங்கி வழிந்தது. பின்னர் மலையின் மேல் இருக்கும் மானசாதேவி கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தேன்.

படிகள் சிறப்பாய் போட்டிருந்ததால் மலை ஏற எந்த சிறமமும் இல்லை. பஜார்களில் கூட்டம் நெரிசல் மிகுந்திருந்தது.  பக்தர்கள் பல வகையான வேண்டுதல்களை செய்து கொண்டிருந்தனர்.

மலையில் இருந்து இறங்கி, மீண்டும் ஹரிதுவாடியில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையை பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அங்கிருந்து விலகி, சாலையில் நடந்து சென்றேன். பீம் குட், ஜெய்ராம் ஆஸ்ரம், என பார்த்துவிட்டு, ஒரு தேநீர் கடையில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுதுதான், மலை மீதிருக்கும் ஒரு சாமியாரை பார்த்தேன் அந்த காட்சி எனக்கு பரவசத்தை அளித்தது.

மலையின் மீதிருக்கும் சாமியார்

 புராதான காலத்தில் இருந்தே பெயர் பெற்ற ஒரு நகரத்தில் அலைந்து திரிகிறோம் என்பதே மனதிற்கு சந்தோசமாகவும், பரவசமாகவும் இருந்தது. மீண்டும் ஆட்டோவில் பயணித்து ரிஷிகேஸ் வந்தடைந்தேன். அறைக்கு வந்து, என் அறைக்கு அருகில் இருக்கும் கணேஸ் சுவாமியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

மயிலாடுதுறையை சேர்ந்த சுவாமி இவர். சிறுவயதிலேயே பக்தியில் மூழ்கி சன்யாசியாகிவிட்டார். வேதஙகளை நன்கு கற்ற உத்தமர். இன்றைய சுய நல மிக்க மனிதர்களைப் பற்றியும், அவர்களிடமிருந்து எப்படி தற்காத்துக் கொள்வதைப் பற்றியும், அருமையான விளக்கங்களால் எடுத்துரைத்தார்.

அவர் மேற்கொளிட்டு சொன்ன ஒவ்வொரு பாடல்களும் மனதிற்கு ஆனந்தத்தை தந்தது.

பகலெலாம் அவரோடு பேசியே கலந்தது, மாலையில் அவரோடு ஸ்ரீ சங்கர நாரயணன் கோவிலுக்கு சென்றேன். இந்த ரிஷிகேஸத்திற்கே மூல பகவான் இவர்தான் என்றார். மிகவும் பழமை வாய்ந்த கோவிலது, கட்டிடக் கலையும் மிக நேர்த்தியாய் இருந்தது.

மறுநாள் காலையில் திரிவேணி சங்கமத்திற்கு சென்று தியானித்தேன்,  தீப மேற்றி வணங்கினேன். கரையில் அமர்ந்து, நதியில் இருக்கும் கூழாங்கற்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். நதியிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்து செவியினருகில் வைத்தேன் நதியின் பாடலை என்னால் கேட்க முடிந்தது.

இயற்கையை அறிதல் – 1

One Response so far.

  1. kamaraj says:

    ஜெயமோகனின் அருகர்களின் பாதை -கட்டுரைகளை நினைவுபடுத்துகிறது. வாழ்த்துக்கள் அன்பரே…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube