நேற்றைய இரவில் என் கனவில் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள். ஏனெனில் அவர் நடித்து வெளிவந்த தோனி திரைப்படத்தை நேற்றைய இரவில்தான் பார்த்தேன். மிக மிக எதார்த்தமான நடிப்பால் கண்களை திரையை விட்டு நகர்த்த விடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

கதையின் கரு இன்றைய அன்றாட வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனத்தை , பக்தியை, வேதனையை என எவ்வாறு வேண்டுமென்றாலும் கிரிக்கெட்டை நாம் பார்க்கும் பார்வையில் எடுத்துக் கொள்ளலாம். கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு , நிதர்சன வாழ்வில் எப்படி நம்மை பாதிக்கிறது, அதுவும் மிடில் கிளாஸ் மனிதர்களை எப்படி வேதனை படுத்துகிறது சந்தோச படுத்துகிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இளையராஜாவின் இசை மனதை கனக்கச் செய்தது. குறிப்பாக காட்சிக்கு பின்னாலே செல்லும் அவரது பின்னணி இசையை சொல்லலாம். பிரபுதேவாவை கடவுளாக வரச்செய்து பாடும் , ஆடும் பாடலை ரசிக்க முடிகிறது. காட்சிகள் பற்றியும் , நடிகர்களை பற்றியும் அதிகம் விவாதிக்காமல் , படத்தின் மையக் கதையை இங்கே தொட்டுச் செல்லலாம்.

கிரிக்கெட் இன்றைய காலகட்டத்தில் மிக பிரபல்யமான விளையாட்டு, அதே வேளையில் அதிகம் பணம் புரளும் விளையாட்டும் கூட.. கிரிக்கெட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஒரு பெரிய போதையை தருகிறது. இது மதுவினால் உண்டாகும் போதையை விட அதிகம் என்பேன்.

திரைப்படத்தில் பள்ளி பருவ காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் சிறுவர்கள் கிரிக்கெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள் . அத்தகைய கிரிக்கெட்டில் சாதாரண மனிதர்களால் நுழைய முடியாது , வெற்றியும் பெற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கும் ஒரு மத்திய தர குடுமத்தை சேர்ந்த மனிதன், தன் மகனின் வாழ்க்கை கல்வியால் மட்டுமே உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறான்.

ஆனால் மகனோ கல்வியில் மந்தம், கிரிக்கெட்டில் கில்லாடி, கிரிக்கெட்விளையாடுகிறான், பார்க்கிறான் , பேசுகிறான், எங்கும் எதிலும் அவனுக்கு கிரிக்கெட்தான்.

இந்த இரு மாறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட மனிதர்களுக்குள், சமுதாயம் அவர்களை எந்த அளவில் தங்களது எண்ணங்களில் வலிமையாகவும், சோர்வாகவும் இருக்கச் செய்கிறது என்பதே விவாதத்திற்குறிய விசயம். இன்றைய கால கட்டத்திற்கு தேவையான விசயத்தை கதையில் சொல்லி இருப்பது பாராட்டுக்குறியது.

எதிர் வீட்டு பெண்ணின் கதாபாத்திரம் மிக அழுத்தமானது. அவளும் தனது குழந்தைக்காகத்தான் அப்படிப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் என அவள் கூறும் போது ஒரு அழுத்தமான உணர்வு உண்டாகிறது.

தந்தை வழி கிரிக்கெட்டை பார்க்கும் அதே வேளையில், அந்த சிறுவனின் வழியாகவும் பார்க்க வேண்டும். அவனுக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை. ஆனால் கிரிக்கெட் வருகிறது , எது வருகிறதோ அதில் முழு கவனம் செலுத்தலாம் என சமுதாயம் அவனது தந்தைக்கு அறிவுரை கூறுகிறது.

ஆனால் அவர் மகனின் எதிர்காலத்தின் மீது கண்மூடித்தனமாக வைத்திருக்கும் நம்பிக்கையினால் அவனை படி படி என்று கூறிக் கொண்டே இருக்கும் அந்த செயல் வ்லிமைபெற்று  ஒரு நாள் தன்னையும் மீறி அவனை அடித்து விடுகிறார். அதில் மகன் ஹோமோ நிலைக்கு சென்றுவிடுகிறான்.

பின் பாசத்தால் அழுது புலம்பி அவனது நோயை சரிசெய்து அவனைக் காப்பாற்ரி அவனது விருப்பமான கிரிக்கெட்டிலேயே அவனது எதிர்காலத்தை தீர்மாணிக்க போராடுகிறார். இந்த படத்தை நான் ஒரு தகப்பனின் படம்தான் என்பேன்.

பள்ளி நிர்வாகம் தங்களது மகன் சரியாக படிக்கவில்லை ஆகையால் அவனை வேறு பள்ளிக்கு மாற்றிவிடுங்கள் என பெற்றோரிடம் (பிரகாஷ்ராஜ்) கூறும் போது, அவர் நிர்வாகத் தலைவரிடம் மன்றாடும் காட்சி நெகிழ வைக்கிறது.

பள்ளிகள் இன்றைய கால கட்டத்தில் கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. நல்லா படிக்கும் மாணவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் படிக்கவைத்து, பள்ளியின் பெயரை தக்கவைத்துக் கொள்ள சுமாராக படிக்கும் மாணவர்களை விரட்டி விடுவது ஞாயமற்ற செயலாகும்.

அத்தகைய நிலைதான் , இன்றைய கல்வி முறையில் உள்ளது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தனது மகனை LKG -யில் சேர்க்கவே படாத பாடு படுகிறார். குழந்தையை படிக்க வைக்க அவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். மேலும் ஒரு பெரிய தொகையையும் நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டியதுள்ளது என வருத்தப்பட்டு கொண்டார்.

இப்போதே இவ்வாறு பணம் புடுங்குகிறார்கள் , இனி எவ்வளவு தூரம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியதுள்ளது, என்ன செய்வது என புரியவில்லை என கவலை பட்டார் என் நண்பர்.

தரமான கல்வி என்ற பெயரில் போலியான கல்வி முறையை கையாண்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்.

கல்வி அமைப்பை முழுவதும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து , எல்லோருக்கும் பொதுவான (கீழ் தட்டு மக்களை கருத்தில் கொண்டு , கட்டணங்களை அமல்படுத்த வேண்டும் . அப்போதுதான் எதிர்கால கல்விமுறையை சரிசெய்ய முடியும் என்பது எனது எண்ணமாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் தகப்பனின் வலிகள் , பாசங்கள், வேதனைகள், சந்தோசங்கள் , சமுதாயத்தின் மேல் அவன் கொண்டிருக்கும் கோபங்கள் என அனைத்தும் சினிமா மொழியுடன் கூறப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசை மனதை சந்தோசத்தில் சோகத்தில் மூழ்க செய்கிறது.

இந்த படத்தை நல்ல படம் என்று கூறி முடிக்க விரும்பவில்லை, நல்ல பாடம் என்று கூறுவதே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?..

One Response so far.

  1. sir, your feelings are correct. if it is possible, pl read my book in tamil, virutchangalaagum siru vidhaigal.

    yours sanathkumar


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube