நேற்றைய மாலை அலுவலக வேலைகள் முடிந்த பின் , மொட்டை மாடிக்குச் சென்று , படுத்துக் கொண்டே ஆகாசத்தை பார்த்தேன். மனது சந்தோசப்பட்டது, ஒரு அமைதி உருவானது. பால்யத்திலிருந்தே ஆகாசம் எனக்கு மிகவும் உவகை தருவதாகவே இருந்து வருகிறது.

வெள்ளை மேகங்கள் பறந்து செல்வதும், ஏதோ ஒரு இடத்தில் ஒன்று சேர்வதும், பின் மீண்டும் கலைந்து செல்வதும் பின் மீண்டும் ஒன்று சேர்வதுமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சேரும் மேகங்களை கூர்ந்து பார்க்கும் பொழுது பல பிம்பங்களை நமக்கு காட்டுகிறது.

பெரும்பாலும் மேகங்கள் நம்மை நேசிக்கும் முகங்களையே காட்டுகிறது. அப்படி ஆகாசத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது,  பால்யகாலத்தில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் தோன்றி மறைந்தார்கள்.

ரெண்டாப்பு வாத்தியார் என ஆசையோடு நாங்கள் அழைக்கும் கந்தசாமி வாத்தியார், ஜான் வாத்தியார், ராமசாமி (சூட்டு வாத்தியார்), பஞ்சவர்ணம் டீச்சர் (கொரங்கு டீச்சர்) சேதுராமன் ஆசிரியர் (தலைமையாசிரியர்), கனபதி வாத்தியார் (தலைமை ஆசிரியர்) மல்லிகா டீச்சர், கீதா டீச்சர் , பெருமாள் வாத்தியார் என அனைத்து ஆசிரியர்களின் முகங்களும் என்னுள் வந்து சென்றது.

எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் என் மனதில் அந்த பசுமையான அழகிய காலங்கள் உறைந்து கிடக்கின்றது. அந்த கால்சட்டை பருவ காலங்கள் எப்போதுமே உன்னதமானவைதான். விளையாட்டுகளும், கனவுகளும் நிறைந்த அந்த காலத்தை பேசப்பேச மனதில் சந்தோசம் அருவி போல பெருகி வழிகிறது.

சமீபத்தில் சில்ட்ரன் ஆப் கேவன் திரைப்படம் பார்த்தேன். பால்ய காலத்து அனுபவங்களையும் குழந்தைகளின் மனநிலையையும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் காட்டியிருப்பார்கள். அந்த திரைப்படத்தை பற்றிய எனது எண்ணங்களை இந்த பதிவில் பதிவு செய்துள்ளேன்.

அலுவலக நெருக்கடிகளும், நிதர்சன வாழ்வில் உண்டாகும் வலிகளும் மனதை காயப்படுத்தினாலும், பால்ய காலத்தை நினைக்கும் போது அந்த காயங்களும் வலிகளும் பறந்து சென்று விடுகின்றன. ஏன் அந்த ஆசிரியர்கள் எல்லாம் என் ஆழ்மனதில் பதிந்துள்ளார்கள், என எண்ணும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. அந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றப்பட வேண்டிய மனிதர்கள்.

கந்தசாமி ஆசிரியரின் புன்னகை, ஜான் வாத்தியாரின் ரைட் போடும் ஸ்டைல், சூட்டு வாத்தியாரின் கண்டிப்பும், பஞ்சவர்ண டீச்சரின் கோபமும் இன்னும் கண்களில் தெரிகிறது. அந்த மண்சுவர் அப்பிய ஓடு வேய்ந்த பள்ளிக்கூடம் மனதில் நிறைந்து உள்ளது. ஊருக்கு செல்லும் ஒவ்வொருமுறையும் அந்த பள்ளிக்கூடத்தின் சிதைந்த சில சுவடுகள்  பழைய நினைவுகளை ஞாபக படுத்திக் கொண்டே உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை என்ற நாவலை வாசித்தேன். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நடந்த , ஒயிட் ஹவுஸ் பிரச்சனையை மையமாக வைத்து நாவல் செல்கிறது. குறிப்பாக அந்த நாவலில் குறிப்பிடும் நில காட்சி வர்ணனைகள் , வாசிக்க்கும் போது அருமையான உணர்வுகளை தறக்கூடியவை.

மேகங்கள் அலை பாய்கின்றது, கறுக்கிறது, பேசிக்கொள்கிறது, உரசிக் கொள்கிறது, தனது வெளிப்பாட்டை மழையாய் கொட்டி தீர்க்கிறது  ஆம் இயற்கைதான் நம்மை எப்போதும் வழி நடத்தி செல்கிறது.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube