சில அனுபவங்கள்..

சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சிம்லா சென்றிருந்தேன் . ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு சிம்லா சென்றிருந்தாலும் அவசரமாய் திரும்ப வேண்டிய சூழ்நிலை உண்டானதால் இயல்பாய் இருந்து, தங்கி சுற்றிப் பார்க்க இயலவில்லை.

எப்போதுமே மலைப்பயணம் சந்தோசமளிக்க கூடியது. இப்போது மலையோடு, மழைப்பயணம் என்றால் சொல்லவேத் தேவையில்லை. சிம்லாவில் இப்போது மழைக்காலம். மழைத்தூரலோடு மலையைச் சுற்றுவது மகிழ்ச்சியான தறுணம்..

அந்த அழகிய காட்சியை இப்படி வர்ணிக்கலாம்

விரித்துப் போட்ட போர்வையைப்போல்
வானம்..
கையருகில் வந்தமரும்
மேகம்..
பசுமையான மரங்களின்
தோற்றம்..
குதூகலமான குரங்குகள்
கூட்டம்..

வான் சொர்க்கத்திலிருந்து
தவறிவிழுந்த
மண் சொர்க்கம்தான்
இந்த சிம்லா..

சிம்லாவில் இருந்த நாட்களை நினைத்துப் பார்த்தால்  மனதில் சந்தோசம் பிறக்கிறது. மலைகளை அழித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் அழகிய மலையில் , அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை எண்ணும்போது வாழ்வதற்க்காண அர்த்தம் தெரிகிறது. சிம்லாவில் என்னை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்ற நண்பர் சூசை அவர்களை இங்கே நன்றியுடன் நினைவுகொள்கிறேன்.

நண்பர் சூசை

சிம்லாவில் இருந்து தில்லி வந்ததும், அனைத்து இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு தில்லியில் நடைபெறுவதை அறிந்து கொண்டு உடனே தில்லி தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றேன்.                   திரு. அப்துல்கலாம் அவர்கள் நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். அப்துல்கலாம் அவர்கள் வருவது தெரிந்தாலே மக்கள் வெள்ளம் பெருகி ஓடும், அன்றும் அப்படித்தான் திரு. அப்துல்கலாம் அவர்களின் உரை அரங்கத்தில் உள்ள் மக்கள் அனைவரின் மனதிலும் நிறைந்தது..

அந்த உரையில் குறிப்பாய் சொல்ல வேண்டும் என்றால் நல்ல சமுதாயம் அமைய வேண்டும் என்றால் நல்ல குடும்பங்கள் உருவாக வேண்டும் என திரு. அபுதுல்கலாம் அவர்கள் கூறியதுதான்.

அவர் குறிப்பிட்ட ஒரு பார்முலாவை இங்கே தறுகிறேன்.

மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் = ஆன்மிகக் குடும்பம் + சந்தோஷம் மிக்க தாய் + வாய்மையான தந்தை + தூய்மையான பசுமை வீடு

திரு. அப்துல்கலாம் அவர்களின் உரையின் எழுத்து வடிவத்தை இங்கே வாசிக்கலாம்:-

திரு. அப்துல்கலாம் அவர்களின் உரை


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube