அக்கம்மா அக்கா..

மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் அழுகைச் சப்தம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.அடி பாதகத்தி தொண்ணூறு வயசுலையும் கல்லு மாதிரி நான் இருக்கையில, அடி நாயே நீ இப்படி பாதியிலேயே போய் சேந்துட்டேயேடி என் ராசாத்தி..நீ அரளிப் பூ வச்சா

அல்லிராணியாட்டம்,

செவ்வந்தி பூ வச்சா

செங்கமலமாட்டம்..

மல்லிக பூ வச்சா

மந்த மாரியாட்டம்..

என ஓங்காரமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் கருப்பாயி பாட்டி…

தெருவெங்கும் செகதியாய் இருந்தது, சிறுவர்கள் சிலர் கொட்டுக்காரர்களை சுற்றிக் கொண்டு நின்றிருந்தனர். வீட்டின் முன் கொட்டகை போடப்பட்டிருந்தது.  அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான் கனகு. நீண்ட இடைவெளிக்கு பின் அந்த ஊருக்கு அவன் வந்திருந்தான். பலர் ஏதோ ஒரு புது மனுசனைப் பார்ப்பதைப் போல, அவனை பார்த்தனர்.

ஆனால் கனகு யாரையும் கவனிக்கவில்லை, அவன் கண்களில், நாற்காலியில் சாத்தி வைக்கப்பட்டிருந்த அக்கம்மாதான் பதிந்திருந்தாள். சுவரில் ஆணி அடிக்கப்பட்டு அக்கம்மாவினுடைய நாடி கட்டப்பட்டிருந்தது, அக்கம்மா அக்கா முன்பை விட கருத்தும் , பருத்தும் இருப்பதாக கனகுவின் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அக்காவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பார்க்கும் பொழுது, எத்தனையோ முறை அவளது கைகளினாலேயே வாங்கிய ஒரு ரூபாய்கள், கனகுவின் நினைவில் வந்து சென்றது. அந்த ஒடு வேய்ந்த வீடு முழுவதும் , ஒரு வாசனை விரவியிருந்தது, அது இறந்து போனவர்களினுடைய வீடு,, என்பதை அது உறுதிசெய்வது போலிருந்தது…

மேலும் வாசிக்க http://www.atheetham.com/?p=4498

நன்றி : அதீதம் இணைய இதழ்


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube