எப்போதும் நல்ல படங்கள் நம் மனதில் உண்டாக்கும் சலனங்கள் அற்புதமானவை; ஒரு குளத்தில் எறியப்பட்ட கல் மூழ்கிவிடினும் அவை உண்டாக்கிய அதிர்வுகள் குழத்தில் அழகிய வரைபடத்தை உண்டாக்கிவிட்டு மறைகிறது, அப்படிப்பட்ட நற்சலனங்களை உருவாக்கும் படம்தான்  THE FROZEN ROSE.39

படத்தில் ஒவ்வொரு காட்சியையும் கவிதையைப்போல் செதுக்கியுள்ளார்கள். நமக்கு பிரியமானவர்களை நாம் பிரிந்து போகும் போதும், நம்மை, நமக்கு பிரியமானவர்கள் பிரிந்துபோகும் போதும் உண்டாகும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. தாய்பசுவைக் காணாமல் கன்றுக்குட்டி தள்ளாடுவதை போல்தான்.

Rukkayah என்ற சிறுமி தன் தந்தையின் வரவுக்காக ஏங்கி பூச்செண்டுகளோடு இரயிலை எதிர்நோக்கி தண்டவாளத்தின் அருகில் நிற்கிறாள். அவள் நின்று கொண்டே உள்ளாள் இரண்டு வருடங்களாக இந்த சிறுமி இப்படி செய்து கொண்டுள்ளாள் என ஒரு பயணி தன் சகப் பயணியிடம் புலம்புகிறான். Rukkayah பூச்செண்டுகளை மற்ற குழந்தைகளைப்போல் பணத்திற்கு தருவதில்லை. அவள் தேடும் நபர் இல்லையென்றாலும் அவளுக்கு விருப்பமான ஒருவருக்கு பூச்செண்டுகளை தந்துவிட்டு செல்கிறாள். 

Rukkayah விடம் பூச்செண்டுகள் வாங்க பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாய் கை நீட்டி யாசிக்கும் காட்சி அற்புதமானது.

இரயில் பயணிக்கும் போது பயணிகள் தாங்கள் வாங்கிய பூச்செண்டுகளை Rukkayah வின் மீது வீசிச் செல்கின்றனர்.

வீட்டில்  Rukkayah வின் அம்மா ,

“ஏன் இப்படி கள்ளம் கபடமற்ற செயல்களால் நீயே உன் உடம்பை வருத்திக்கொள்கிறாய் Rukkayah  உன் தந்தை வரமாட்டார். அவர் இறைவனிடம் சென்றுவிட்டார். புரிந்துகொள்” என கண்ணீர் சிந்துகிறாள். ஆனால் குழந்தையின் முகம் காணும்பொழுது அவளது நம்பிக்கையை களைக்க மனமில்லாமல் சரி உனக்கு பிடித்ததை செய் மகளே எனக் கூறி Rukkayah  வை அணைத்துக் கொள்கிறாள்.

புல்வெளிக் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் இரயில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம். பின்னணி இசை நம் மனதை காட்சிகளோடு கட்டிப்போடுகிறது.

பனிபொழியப்போகும் ஒரு பனிக்கால இரவு வேளையில் பூச்செண்டுகளை எடுத்து இரயிலை நோக்கிச் செல்ல இருக்கும் மகளை தாய் கண்டிக்கிறாள். பின் உனக்கு அரை மணி நேரம்தான் விரைவில் வந்துவிட வேண்டும் எனக் கூறி அனுப்பி விடுகிறாள்.

நம்பிக்கையோடு காத்துள்ளாள்  Rukkayah  இரயில் வருகிறது. இரயிலில் இருந்து வரும் நபர் Rukkayah  வை இரயிலுக்குள் வா என அழைத்துச் செல்கிறார்.. அங்கே Rukkayah வின் தந்தை உள்ளார். Rukkayah வை வாரி அனைத்துக்கொள்கிறாள். இரயில் செல்கிறது.37

வீட்டில் சற்றே கண்ணயர்ந்துவிட்ட அம்மா கடிகாரத்தை பார்கிறாள் Rukkayah சென்று வெகுநேரம் ஆகியிருந்தது. வெளியில் பனிபொழிந்து கொண்டிருந்தது. பதட்டத்தோடு கம்பளியை எடுத்துக்கொண்டு இரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுகிறாள் அன்னை. பனியில் சருக்கி விழுகிறாள், எழுகிறாள், ஓடி வந்து பார்கிறாள், இரயில் தண்டவாளத்தின் அருகே பனியில் நனைந்தவாறு பூச்செண்டை வைத்துக்கொண்டு Rukkayah அமர்ந்துள்ளாள்.  இரயில் வந்தது அவள் தந்தையை கண்டது; இரயிலோடு சென்றது எல்லாமே கற்பனைதான்.

படம் பார்க்க..

THE  FROZEN  ROSE

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube