சகோதரனே மது…

மனித சமூகத்தின்IMG_20180224_225420
பழைய வாழ்க்கையின்
அடையாளமான நீ
ஏன்
காட்டிலிருந்து
இந்த
நாற்றமெடுத்த
மனித சமூகத்திற்கு
வந்தாய்?

நீ எடுத்த
பொருட்களுக்கு
திருட்டு
என
பட்டம்கட்டி
உயிரைக்கொன்ற
இந்த
நாகரீக வேடமணிந்து
வாழும்
வேடதாரிகள்..
எளிய மனிதர்களை
சுரண்டி
உயிர்வளர்க்கும்
பிணம்திண்ணும்
கழுகுகளை
என்ன செய்வது..

கழுகுகள் கூட

இறந்தபின்தான்
உடலைத் தீண்டுகிறது!
இந்த மாமிச மனித
கழுகுகள் !

சக மனிதனின்
உயிருடன் இருக்கும்பொழுதே
தீண்டுகிறார்கள்!
கல்வியில்
கலாச்சாரத்தில்
அரசியலில்
உயர்ந்தவர்களென
மார்த்தட்டிக்கொள்ளும்
சமூகமே
உங்கள் வேசமுகங்கள்
வெளுத்துவிட்டன..
அவன் திருடிய
பொருட்களை
நீங்கள் அன்றாடம்
எவ்வளவு
கழிவில் சேர்க்கிறீர்கள்!
அத்தகைய பொருட்களை
அவன் எடுத்தது
திருட்டா?..
ரஸ்கோல்நிக்கோவ்
இழிகுணம் கொண்ட
வட்டிக்கார கிழவியை
கொலை செய்துவிட்டு
மரணத்திின் வழியை
உணர்ந்து வருந்தினான்.

நீங்களோ?

எளிய மனிதனின்
உயிரை எடுத்து
படம்பிடித்து
மகிழ்கிறீர்கள்!
இருண்ட
நிலவறைக்குள்ளிருந்து
அந்த இருண்மை
நிறைந்த வாழ்க்கையிலும்
வெளிச்சத்தை தேடி
காண்பித்தான்
தஸ்தயெவ்ஸ்கி..
நீங்களோ

 

உங்கள்
வலையில்
மாட்டிக்கொண்ட
சுண்டெலியாய்
ஆகிப்போனான்
மது!
மது நீ
விலங்குகளோடே
இருந்திருக்கலாம்!
அவை கூட
உன் பசியை
போக்கியிருக்கும்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube